அழகியசிங்கர்
முதலில் நான் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கலாமென்று நினைத்தேன். பின் வேண்டாமென்று விட்டுவிட்டேன். அது ஒரு மொழிபெயர்ப்பு நூல். அந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது இன்னும் கொஞ்சம் கவனம் தேவை என்று தோன்றியது. பின் நேற்று மாலை 4மணிக்குத்தான் இன்னொரு புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்தேன். தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தேன். எப்படியாவது இந்தப் புத்தகத்தைப் படித்தே தீர்வது என்று முடிவு கட்டினேன். ஆனால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. வேறு வேறு வேலைகள் வந்து தொந்தரவு செய்யத் தொடங்கின. ஆனால் புத்தகத்தைக் கீழே வைக்கத் தோன்றவில்லை. எப்படியாவது முடித்து விட வேண்டுமென்று கங்கணம் கட்டினேன். இதோ முடித்தும் விட்டேன். ஆனால் இந்தப் பதிவை நேற்றே இட முடியவில்லை.
நான் படித்த புத்தகத்திற்கு வருகிறேன். அது üராஜாஜியின் ஜெயில் டைரி.ý 206 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. 1921ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தோராம் தேதி பிற்பகல் ராஜாஜியும் மாகாண கமிட்டித் தலைவர் ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரியாரும் வேலூர் மத்திய சிறைக்கு வந்து சேர்ந்தார்கள் என்று ஆரம்பிக்கிறது இந்த ஜெயில் டைரி.
ராஜாஜியை ஜெயிலுக்குக் கூட்டிப் போக போலீசு ஜவான்கள் வர கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது. அதற்குள் ராஜாஜி ஒரு சிறுகடிதம் மகாத்மாவிற்கு எழுதுகிறார்;
ýஎனக்கு முன்று மாத வெறுங்காவல் தண்டனையே கொடுத்திருக்கிறார்கள். அது மிகவும் சொற்ப தண்டனை. ஆயினும் தாங்கள் ஜனவரி மாதத்திற்குள் சுயராஜ்யத்தைப் பெற்றுவிடுவீர்கள்
என்று நம்புகிறேன். அதனால் எவ்வளவு தண்டனை கொடுத்தால் என்ன? ý
சிறைக்குச் செல்வதற்கு முன் என்னன்ன எடுத்துக்கொண்டு போனார் என்பதை ஒரு விஸ்ட் போடுகிறார். ýநான் என்னுடைய சிறு பையில் பற்பொடியும், கிராம்பும், ஒரு குயர் கடுதாசியும், குண்டூசிகளும், பென்சில்களும், ஒரு பௌண்டன் பேனாவும் கொண்டு போயிருந்தேன். அத்துடன் பவுண்டன் பேனாவுக்கு üஸ்வான்ý மையும், ஒரு கூஜாவும், ஒரு சிறு பித்தளைக் குவளையும் வைத்திருந்தேன். என்னிடம் சில புஸ்தகங்களும் இருந்தன. கிறிஸ்துவ வேதம், ஷேக்ஸ்பியர் நாடகங்கள், தாயுமானவர் பாடல்கள், மகாபாரதத் தமிழ் மொழி பெயர்ப்பு, பி சி ராய் எழுதிய மகாபாரதம் ஏழு பாகங்கள், ராபின்சன் க்ரூúஸô - இவைதான் அவர் கொண்டு போன புத்தகங்கள். கூடவே தூரத்துப் பார்வைக்கான கண்ணாடியும், படிப்பதற்கான கண்ணாடியும் அவரிடம் இருந்தன.
முதல் பத்து நாட்கள் சிறையில் அவர் வசிக்க வேண்டியிருந்த அறைகள் தனிக் கொட்டடி. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் இருக்கக் கூடியவை. அதில் பத்துநாட்கள் அவர் தங்கினார்.
முதல் நாள் சிறை அனுபவத்தைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:
üசிறைவாசம் சந்தோஷமாகவே தோன்றுகிறது. வெளியிலிருப்பவர்கள்தான் சிறைக்குப் பயப்படுகிறார்கள். எங்களை மாலை 5.45 மணிக்கே அடைத்து விட்டார்கள். அறைக்குள் என்னை வைத்து வெளியே பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டு போகும் முதல் அனுபவம் எனக்கு இதுவே. அதனால் எனக்கு என்னவோ மாதிரி இருந்தது.ý
இன்னொரு இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் : 'துணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்து இந்த வாழ்வைப் பரிபூரணமாக அனுபவிப்பதற்கு என்னிடம் அதிக பலமில்லாமலிருக்கிறதே என்று எண்ணி வருந்தினேன்.'
மோர் நல்ல ஆரோக்கியமான உணவு. விலையும் அதிகமில்லை. ஆனாலும் அதை அரசாங்கத்தார் கைதிகளுக்கு ஏன் கொடுக்க விரும்பவில்லை என்று ஆச்சரியப்படுகிறார் ராஜாஜி.
ராஜாஜி ஆஸ்துமா நோயால் கஷ்டப்படுகிறார். இந்த ஜெயில் டைரி முழுவதும் அவர் ஆஸ்துமா நோயால் படும் அவஸ்தை அங்கங்கே வருகிறது.
ராஜாஜிக்கு அரசியல் கைதிகளை சரியாகக் கவனிக்க வில்லை என்ற வருத்தம் இருக்கிறது. சாதாரண கைதிகளுக்குக் கொடுக்கும் உணவையே கொடுக்கிறார்கள். உணவைப் பிச்சைக்காரர்கள் மாதிரி அவசரமாக அள்ளி அள்ளிச் சாப்பிட வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று குறிப்பிடுகிறார்.
அவர் தங்கியிருக்கும் அறையைப் பெருக்க நல்ல துடைப்பம் கிடையாது. சிறை அதிகாரிகள் அறைகளின் சுத்தத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. மூட்டைப் பூச்சிகளும், கொசுக்களும் தொந்தரவு செய்கின்றன.
ஆங்கிலத்தில் ராபின்ஸன் குரூúஸô என்ற ஓர் அழகான கதைப் புத்தகம் இருக்கின்றது. அதில் குரூúஸô என்பவர் கப்பல் உடைந்து தன்னந்தனியாக ஒரு நிர்மானுஷ்யமான தீவில் அகப்பட்டுக்கொண்டுள்ளார். ஆயினும் அவர் தீவுக்கு வந்த சில காலம் கழித்து, üஏதேனும் கப்பல் வந்து அழைத்துச் செல்லாதா? என்று அடிக்கடி கடலை நோக்கியவண்ணமாக நிற்கிறார் என்று, அந்தக் கதை கூறுகிறது. அதேபோல் சில நண்பர்கள் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள் என்கிறார் ராஜாஜி.
ராஜாஜியின் சரித்திர அட்டையில் கீழ்கண்ட விவரங்கள் காணப்படுகின்றன.
"அரசியல் கைதி. வந்த தேதி . 21.12.2021. அப்பீல் செய்ய மறுத்துவிட்ட தேதி 24.12.2021. பெயர் : ஸி ராஜகோபாலச்சாரியார். பிராமணர். இந்திய தேசிய காங்கிரசின் பொதுக் காரியதரிசி. கல்வி நிலை : ஸி.
மேலும் சில விபரங்கள் :
தண்டனைத் தேதி : 21.12.2021
விடுதலைத் தேதி : 20.03.2022
வயது : 42
உயரம் : 5 அடி 4 அங்குலம்
நிறை : 104 ராத்தல்.
தினம்தினம் ஒரே மாதிரி உணவையே காலையும் மாலையும் கைதிகளுக்குக் கிடைக்கிறது. அதில் எத்தனை மண்ணும் கல்லும். எத்தனை தூசியும் தும்பும். இவற்றை தினமும் உண்பதற்கு நிரம்பக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அதற்குக் காரணம் என்ன என்று யோசிக்கிறார் ராஜாஜி. அவரே காரணத்தைக் கண்டுபிடித்து சொல்கிற விஷயம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. அவர் என்ன சொல்கிறாரென்றால், üநாம் இதுவரை நம்மைச் சூழ்ந்துள்ள ஏழை மக்களைச் சிறிதும் எண்ணாமல் பலவிதமான பலகாரங்களை உண்டு பழகியதுதான். இந்த விஷயங்களை எண்ணி எண்ணி நாங்கள் உணவை மகிழ்ச்சியுடன் உண்ணப் பழகி விட்டோம்.ýý என்கிறார்.
சர்க்கார் ஏற்படுத்தும் கஷ்டங்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்கிறார் ராஜாஜி. துன்பத்தைத் தாங்க முடியாமல் இருந்தால் சர்க்கார் வெற்றி அடைந்ததாக மமதையில் இருப்பார்கள்.
இந்த இடத்தில் ஒரு கதையைக் குறிப்பிடுகிறார். பகதூர் ஷா என்னும் சக்கரவத்தியைப் பற்றி முகமது ஹ÷úஸன் சொன்ன சுவாரசியமான கதை இது.
பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர் ஒருவர் பகதூர் ஷாவைக் கேலி செய்வதற்காக அவருடைய மகனின் தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்துக்கொண்டு வந்து அவர்முன் வைத்தார். அப்பொழுது பகதூர் ஷா அதைக் கண்டு புன்னகை புரிந்தார். பிறகு அவருடைய தோழர்கள் அவர் புன்னகை புரிந்ததன் காரணத்தை வினவினார்கள். üüஎனக்கு வருத்தம் உண்டாக்கவே அப்படிச் செய்தான். நான் வருத்தத்தைக் காட்டினால் அவன் எண்ணம் கைகூடி விடுமல்லவா?ýý என்று பகதூர் ஷா பதிலுரைத்தார்.
இன்னொரு இடத்தில் இப்படிக் கூறுகிறார் : üஒத்துழையாமை என்பது அரசியல் இலட்சியம் ஒன்றை அடைவதற்காக ஏற்படுத்தப்பட்ட சாதனம் மட்டுமன்று. வாழ்க்கையை எவ்விதம் நடத்த வேண்டும் என்னும் தார்மிக வழியைக் காட்டுவதே அது. அந்நியாயத்துடன் ஒத்துழையாமலிருப்பதே அவசியம் செய்து தீர வேண்டிய கடமையாகும்.ý ராஜாஜி சுறும் ஒத்துழையாமை பற்றி கருத்து நாம் எல்லோரும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய தார்மிக வழி என்று எனக்குப் படுகிறது.
சிறையில் இருக்கும் ராஜாஜி வெளியே உள்ள கிராமத்திலிருந்து வரும் நாதஸ்வர இசையால் பரவசம் அடைகிறார்.
சிறையில் இருந்துகொண்டு ராஜாஜி நகைச்சுவை உணர்வை இப்படி வெளிப்படுத்துகிறார் : üபொல்லாத ரயில் வண்டி சிறைக்கு அருகில் என்னைத் தமாஷாகக் கேலி செய்வதுபோல் கூவிக்கொண்டே போகிறது.ý
ஈக்களையும் எறும்புகளைப் பற்றி சொல்லும்போது தன் சிறுவயது நினைவுகளைக் கூறுகிறார் :
"ஈக்களை என்னுடைய சுற்றப்புறத்திலிருந்தும் நீக்க முடியவில்லை. மனத்திலிருந்தும் நீக்க முடியவில்லை. ஈக்களும் எறும்புகளும் சின்னஞ் சிறு வயதிலிருந்தே என்னுடைய இரண்டு நண்பர்களாக இருந்து வந்திருக்கின்றன. இவைகளில் எதைப் பார்த்தாலும் சிறுபிராயத்து நினைவுகளும் அப்போது என் தாயார் எவ்விதம் இருந்தாரோ, அதுவும் என்னுடைய ஞாபகத்திற்கு வந்து விடுகின்றன."
தக்காளிப்பழத்தை வைத்து ராஜாஜி ஒரு ஜோக் அடிக்கிறார்:
'எனக்குத் தரும் தக்காளிப் பழங்களைப் பார்த்தால் இவைகளை உண்பதற்காகவேனும், விடுதலையான பிறகும் கூட வேலூர்ச் சிறைக்கு வர ஆசை ஏற்படும்போல் தெரிகிறது.'
ராஜாஜி விடுதலை ஆகும் நாள் சமீபித்துக் கொண்டிருக்கிறது. அந்தத் தருணத்தில் ராஜாஜி வருத்தத்துடன் இப்படிக் குறிப்பிடுகிறார் 'வெளியே சென்றதும் நான் பார்க்கக் கூடியது யாது? போர்க்களம் வெற்றிடமாயிருக்கும். போர்வீரர்கள் எங்கும் காணப்பட மாட்டார்கள்.'
சின்ன சின்ன தகவல்களைக் கொண்ட இப்புத்தகத்தைப் படிக்க படிக்க பல விஷயங்களை எனக்குப் போதிப்பதாகத் தோன்றுகிறது. மறக்க முடியாத புத்தகம்.
செவ்வாய்கிழமை வாசிப்பு
ReplyDeleteஎழுத்தாளர் திரு. நீல. பத்மநாபன் அவர்களின் நான்கு சிறுகதைகள் வாசித்தேன்.
இவரது கதைகளில் சோகம் நிரம்பியிருக்கிறது என்றாலும் சிற்பி அணு, அணுவாய் ரசித்து சிலையை உருவாக்குவது போல, நிதானமாகவும், அடி அடி மேல் அடி எடுத்து வைத்தும் காய்களை நிதானமாக நகர்த்தி நம்மை ஒரு விர்ச்சுவல் உலகிற்கு கொண்டு செல்கிறார்.
‘நைவேத்தியம்’ - கோமுப் பாட்டி செத்துப் போய்விட்டாள் என்று ஒரு சிறுவன் அரக்கப் பரக்க ஓடி வந்து சொல்கிறான். திக்பிரமை பிடித்தவர் போல் ஆகிறார் 60 வயது நிரம்பிய லஷ்மிநாராயணன் போற்றி. அவரது தந்தையும் கோமுவின் தந்தையும் நண்பர்கள். ஒரு தடவை (போற்றியும்,கோமுவும்) குழந்தைகளாக இருந்த போது, கோமுவின் அப்பா இவர்கள் இரண்டு பேருக்கும்தான் கல்யாணம் நடக்க வேண்டும் என்று தமாஷாகச் சொல்லுகிறார். ஆனால் இரண்டு பேர்களுடைய அப்பாக்களுக்கும் சீக்கிரமே இறந்து போய்விடுகிறார்கள். லஷ்மிநாராயணன் போற்றி கோவிலில் அர்ச்சகராகி விடுகிறார். இவர்கள் இருவர் மனதிற்குள்ளும் காதல் புகுந்து விடுகிறது. கோமு சாமிக்கு அவள் கையால் துளசி மாலை கட்டி எடுத்து வருவாள். அந்த மாலையை சாத்தியபிறகே அம்பாளுக்கு வேறு மாலைகளைப் போடுவார். காதல் என்றாலும் அது சில விநாடிகளில் பார்க்கும் கண்களின் பார்வை மட்டுமே! இந்நிலையில் கோமுவுக்கு திருமணம் நடந்துவிடுகிறது. ஒரு நாள் கோமு தன் கணவனுடன் துளசி மாலையுடன் கோவிலுக்கு வருகிறாள். அவள் கணவனின் கண்கள் லஷ்மிநாரயணன் போற்றியை துகில் உரிக்கிறது. அதற்கு பின் வீட்டில் கோமுவை அடி நொறுக்கிவிட்டான் என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசிக்கொள்வது இவர் காதில் விழுகிறது. ஒரு நாள் கோமுவின் கணவன் சர்ப்பம் தீண்டி இறந்து விடுகிறான். அதன் பிறகும் கோவிலுக்குகோமுவின் துளசி மாலை சிறுவர்கள் மூலமாக வந்து கொண்டுதான் இருந்தது. அன்று மாலை இன்னும் வரவில்லையே என்று பதை பதைப்போடு காத்திருக்கும் வேளையில் தான் கோமு இறந்து விட்டாள் என்கிற செய்தி வருகிறது. ஒற்றைப் பிள்ளையான அவருக்கு கல்யாணம் செய்து வைக்க, அவரது இளமைக் காலத்தில் அம்மா எவ்வளோ முயற்சி செய்தாள். ஆனால் கடைசி வரை இவர் கல்யாணமும் செய்து கொள்ளவில்லை. கோமுவின் மீது இருந்த காதலால் அன்றைக்கே அவரும் இறந்து விடுகிறார்.
’பயம்’- மிகவும் அருமையாக எழுதப்பட்ட திரில்லர் பேய்க் கதை!
குன்றின் மீதிருக்கும் இயற்கை காட்சிகள் நிறைந்த ஓர் இடத்தில் வீடு கட்டி குடியேறுகின்றனர் ஒரு இளம் தம்பதியினர். உறவினர்களுக்கும், நண்பர்களும், அதன் கீழே மிக அருகில் சிதை எரிக்கும் சுடுகாடு இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இந்நிலையில் கணவன் வீட்டில் தனித்திருக்கும் போது அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. ஒரு பெண் ஆவி இவனைப் பிடிக்க வருகிறது. ( இலைச் சர சரப்பு, முல்லைப் பூ மணம் இத்யாதி...) கதை முழுவதையும் சொன்னால் சஸ்பென்ஸ் போய்விடும் என்பதால் இத்துடன் நிறுத்தி விடுகிறேன்.
‘ஊமைத் துயரம்’ காது கேட்காத வாய் பேசமுடியாத ஊமையன், நாராயணின் அம்மா, அப்பாவின் பாசத்திற்கு உரியவனாகிறான். அவனுக்கு ஊரார் கல்யாணம் செய்து வைக்கின்றனர். நிறைய குழந்தைகள் பிறக்கின்றனர். நாராயணின் அம்மா, அப்பா அவனுக்கு அவ்வப்போது உதவி செய்கின்றனர். மூட்டைத் தூக்கிப் பிழைக்கிறான். நாராயணனின் அம்மா, அப்பா காலத்திற்கு பிறகு மீண்டும் அவர்கள் வீட்டுத் திண்ணையிலேயே வந்து படுத்துக் கொள்கிறான். கால் வெடித்து புண்ணாகி அதிலிருந்து சீழ் வடிகிறது. திண்ணையல்லாம் பரவுகிறது. தூக்கத்தில் அவன் எழுப்பும் வினோதக் குரலினால் குழந்தைகள் பயந்து அலறுகிறார்கள். ( மனசு கேட்காவிட்டாலும்) மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவனை வெளியேற்றுகிறார்கள். பூட்டப்பட்டிருக்கும் கேட்டிற்கு வெளியே நின்று அழுகிறான் ஊமையன். நாராயணன் திருமணமாகி வேறு குடித்தனம் போய்விட்ட பிறகும் அவனைப் போய் பார்த்து உதவி பெற்று வருவான். அவனது மருமகன் வந்து தன் மாமனார் ஊமையன் செத்துவிட்டான் என்று சொல்கிறான். மனம் பதைத்துப்போன நாராயணன் அவனைத் தேடி வீதிக்கு செல்கிறான். கிளைமாக்சை எதிர்பார்த்ததற்கு மாறாக வித்தியாசமாக முடித்த்திருக்கிறார் ஆசிரியர்.
’ கூறாமல்’ - தனது 55 வயதில் தன்னை யாரும் சீண்டுவதில்லை, வெளியே போனால் கூட சொல்லிக்கொண்டு போக மாட்டேன் என்கிறார்கள் என்று மனைவி மற்றும் கூட்டை விட்டு வெளியேறிய பிள்ளைகளின் மீது கோபம், கோபமாய் வருகிறது. உணர்ச்சி கொப்பளிப்பும், தன் இயலாமையும் நினைத்து வருந்தி வீட்டை விட்டுக் கிளம்புகிறார். மழைக்கு கோவிலின் அருகே இருந்த கூரையில் ஒதுங்கி நின்ற போது ஒரு பண்டாரம்
‘ யாரும் யார்கிட்டயும் சொல்லிகிட்டு வரல, சொல்லிகிட்டும் போகமாட்டோம் ‘ என்று தற்செயலாகச் சொல்லுகிறார். எதையோ யோசித்தவாறு ரோட்டில் இறங்கி விறுவிறுவென்று நடக்கிறார்