Wednesday, October 16, 2019

42வது நாளின் வாசிப்பனுபவம் (13.10.2019)



என் நண்பர் வேணுகோபாலனின் 'தர்ப்பண சுந்தரி' என்ற கதைத் தொகுப்பு


அழகியசிங்கர் 





எஸ்வி வேணுகோபலனின் 'தர்ப்பண சுந்தரி' என்ற சிறுகதையை  இன்று (25.12.2019) மதியம் 2 மணிக்குப் படித்து முடித்து விட்டேன்.  இது குறித்து மாலை பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் எஸ்வி.வி. 

எஸ்.வி.வி என் பால்ய காலத்து நண்பர். மாம்பலத்தில் நானும் அவரும் நடந்து போகாத பாதை கிடையாது.  என் ஒவ்வொரு அசைவும் அவருக்கும் அவருடைய ஒவ்வொரு அசைவும் எனக்கும் தெரியும்.

நான் இந்தத் தொகுப்பைப் படித்தபோது பழைய கால நினைவுக்குப் போய்விட்டேன்.  இதில் ஒவ்வொரு கதையாக எழுதியதைப் படித்தேன்.  அவர் எந்தச் சுழலில் இந்தக் கதையை எழுதினார் என்று எனக்குப் புரிய ஆரம்பித்தது.

நாங்கள் கதைகள் எழுத ஆரம்பித்தபோது பத்திரிகை பத்திரிகையாக அலைந்தோம்.  எந்தப் பத்திரிகையில் கதைகள் பிரசுரமாகும் என்று.  நாங்கள் என்கிறபோது நானும், எஸ்.வி.வி மட்டுமல்ல.  சுவாமிநாதன் என்கிற என் ஒன்றுவிட்ட சகோதரனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் 'தூதுவன்' என்ற கையெழுத்துப் பத்திரிகையை சுவாமிநாதன் ஆரம்பித்தார்  அதில் எழுத ஆரம்பித்தேன்.  ஆனால் எஸ்.வி.வி அதில் எழுதினாரா என்று தெரியவில்லை. ஆனால் சுவாமிநாதன் கூடிய விரைவில் 'மலர்த்தும்பி" என்ற சிறு சஞ்சிகையைத் தொடங்கினார்.  அதில் நானும்  எஸ்.வி.வியும் புகுந்துகொண்டோம்.

நாங்கள் மூவரும்தான் பிரதான அங்கம் வகித்தோம்.  எஸ.வி.வி 'சுகந்தன்' என்ற பெயரில் கவிதைகள் எழுதுவது, வேணுகோபலன் என்ற பெயரில் கதைகள் எழுதுவது என்று பத்திரிகை முழுவதும் எடுத்துக்கொண்டார்.  நானும் என் இயற்பெயரான மௌலி என்று வைத்துக்கொண்டு கவிதை, கதைகள் எழுத ஆரம்பித்தேன்.   இத் தொகுப்பில் 'தீர்த்தம்' என்ற கதையில் எஸ்.வி.வி என்னையும் என் சகோதரரைப் பற்றிதான் எழுதியிருப்பார்.  ஒரு காட்சி படிமம் அந்தக் கதை.

உண்மையில் எங்கள் எழுத்து ஒரு இரண்டுகெட்டான் எழுத்தாகத்தான் இருந்தது.  கணையாழி, தீபம் படித்துக்கொண்டிருந்ததால் அதில் வரும் கதைகள் கவிதைகள் எங்களை வசப்படுத்தத் தவறவில்லை.  ஆனாலும் எங்களால் கணையாழி தீபத்திற்கெல்லாம் எழுத முடியாது என்று அப்போது நினைத்தோம். 

எங்களுடைய 'மலர் தும்பி' பத்திரிகையிலேயே நாங்கள் திருப்தி அடைந்து விட்டோம்.  மலர் தும்பியை அச்சிடுவோம்.  பெரும்பாலும் சுவாமிநாதன்தான் அதிக செலவு செய்து அச்சிடுவார்.  பத்திரிகையை வங்கியில் உள்ள நண்பர்களிடம் வினியோகிப்பேன்.  பெரும்பாலோர் வேண்டா வெறுப்பாக வாங்கி வைத்துக்கொள்வார்கள்.

ஒரு கட்டத்தில் 'மலர் தும்பி' நின்றுவிட்டது.  அதற்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதால் அலுத்துப்போய் சுவாமிநாதன் நிறுத்தி விட்டார். 

 எஸ்.வி.வியும் அதன் பின் எழுதுவதை நிறுத்திவிட்டாரென்று நினைக்கிறேன்.  சுவாமிநாதன் பெரிய பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்து ஓரளவு வெற்றி பெற்றார்.  அவருடைய நீண்ட நாவல் ஒன்று ஆனந்தவிகடனில் பிரசுரமானது.

எஸ்.வி.வி நான் பணிபுரிந்த வங்கியில் சேர்ந்தார். எஸ்,வி.வி திறமையானவர்.  எதையும் பார்த்த மாத்திரத்தில் கிரஹித்துக்கொண்டு அப்படியே சொல்வார்.  ஒரு சுஜாதா கதையைப் படித்தாரென்றால் அதை மனப்பாடமாக ஒப்பிப்பார்.

எஸ்.வி.வி ஏன் தொடர்ந்து எழுதவில்லை என்று நான் யோசித்துப்பார்க்கிறேன்.  'மலர் தும்பியில்' 1979ல் எழுதிய கதைக்குப் பிறகு அவர் கதை எழுதியது 1985ஆம் ஆண்டு.  இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் அவர் வங்கியில் சேர்ந்து டிரேட் யூனியனில் முக்கியப் பங்கு எடுத்துக்கொண்டு விட்டார்.  அது அவர் எழுத்தைப் பாதித்ததோ என்று எனக்குத் தோன்றும்.

மேலும் அவர் எழுத்தில் தீவிரத் தன்மை எழுத்துமில்லை, பத்திரிகைத் தனமாகக் கதை எழுதும் தன்மையும் இல்லை.   அதனால் ஜனரஞ்சகமாக இயங்கும் பத்திரிகைகளில் அவருக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. 

   உண்மையில் அவருக்குக் கவிதை எழுதுவதில் ரொம்பவும் ஆர்வம். இரண்டுமே அவர் பல ஆண்டுகளாகத் தொடரவில்லை என்று நினைக்கிறேன்.

அதே மாதிரி அவர் தீவிரத்தனமாக கதைகளை சிறுபத்திரிகைலும் தொடரவில்லை. அப்போது மலர்தும்பியை விட்டால் வேறு சிறுபத்திரிகை தெரியவுமில்லை. இத் தொகுப்பில் உள்ள 'கவித்துவம்' என்ற கதை கணையாழியில் 1985ல் வெளிவந்துள்ளது.

தொழிலாளர் இயக்கத்தோடு அவர் இயங்கியதால் அவரால் தொடர்ந்து கதையும் கவிதையும் எழுதத் தோன்றவில்லை என்று நினைக்கிறேன்.  டிரேட் யூனியனில் ஏற்பட்ட பக்தியால் அவர் படைப்புகளில் சிவப்பு கலர் பூசப்பட்டிருக்குமா என்று நினைத்தேன்.    நல்லகாலம் இல்லை. ஆனால் அவர் அதனால்தான் எழுத முடியாமல் போய்விட்டதா என்றும் தோன்றியது. அவர் கதை கவிதை எழுதவில்லை என்று நினைத்தேன்.  ஆனால் அவர் கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிக் கொண்டிருந்தார்.  எல்லாம் நாட்டின் நடைமுறை சிக்கல்களை. அரசியலை. 

நானும் அவரும் நட்புடன் இருந்த காலத்தில்  அவருக்குப் பேச்சுத் திறமையெல்லாம் கிடையாது.  (எனக்கு எப்போதும் கிடையாது) டிரெட் யூனியனில் சேர்ந்து இந்தத் திறமையெல்லாம் அவர் வளர்த்துக்கொண்டார். எதையும் எப்போதும் வேண்டுமானாலும் உடனே பேசுவார்.  யாருக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் உடனே போய் விடுவார்.

அவர் எழுத்தில் அவருக்கு அலாதியான திறமை இருந்தாலும் அவர் கட்டுரைகளில்தான் அதிகம் கவனம் செலுத்தினார்.  அவ்வளவாய் கதைகள எழுதவில்லை, கவிதைகள் எழுதவில்லை.  அல்லது இந்தப் புத்தகத்தைத் தவிர எனக்கு அவ்வளவாய் தெரியவில்லை.

இந்தப் புத்தகத்தை சற்றுமுன்தான் முழுவதும் படித்து முடித்தேன்.  அவருடைய எழுத்து வெகுஜன வாசகரை கவர்ந்திழுழக்கும் எழுத்தில்லை.  

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அவர் எழுத்து எதை மையப் படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. 'மரணம்.' இவருடைய இத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் மரணம் என்பதைச் சுற்றி சுற்றி வருகிறதோ என்று தோன்றுகிறது.  

'கடைசி நாள் படுக்கை' என்ற கதையில் அவருடைய சகோதரியின் மரணத்தை எழுதியிருப்பார். உருக்கமாக இருக்கும்.  பெரும்பாலும் அவர் கதைகளில் அவரைச் சுற்றி நிகழ்கிற நிகழ்ச்சிகளாக இருக்கும். அதன் மூலம் ஒரு அர்த்தத்தைக் கண்டு பிடிப்பார்.

'சூடாமணி மாமி\ என்ற இன்னொரு கதை.  அதில் வருகிற வரிகளைப் படிக்கிறேன்.  'உயிர் கடிகாரம் நின்ற இடத்தில் அது காட்டும் காலத்தைப் பற்றி இனி என்ன கேள்வி, அது காலத்தைக் கடந்து விட்டது இப்போது.'

மூன்றாவது 'மாநகர்ப் புதைக்குழி" என்ற கதை.  குழாய் ரிப்பேர் செய்ய வந்த பையன் ரிப்பேர் எசய்ய வந்த இடத்தில் பஸ் மோதி இறந்து விடுவான். 

'முட்டுச் சந்து'  என்ற இன்னொரு கதை.  இரண்டு கதைகளில் தற்கெகாலை செய்ய முயன்று தப்பிப்பதுபோல் வரும். 

'தர்ப்பண சுந்தரி' என்ற கதை மேல் ஜாதி பெண்ணை கீழ் ஜாதி பையன் திருமணம் செய்து கொண்டதால் குடும்பங்களில் ஏற்படும் பிளைவை விவரித்துக்கொண்டு போகிறார்.  

இவர் கதைகளை எப்படி எழுத வேண்டுமென்பதில் ஒரு ஒழுங்கு இருக்கிறது.  ' மரணம் முன் வைத்து எழுதப்படும் கவிதைகள், கதைகள் தத்துவ தரிசனமாக நகர்கின்றன' என்கிறார் வேணுகோபாலன்.  எல்லாம் சரிதான் இவர் மணரம் என்கிற பொதுத் தன்மையை மட்டும் கதைகளாக வராமல், வாழ்க்கையின் வேறு பல அம்மசங்களையும் கதைகளாக மாற்றியிருக்கலாம். 



'உதிர்ந்தும் உதிராத' என்ற புத்தகதில் எல்லாம் 'அஞ்சலி கட்டுரைகள்'. இப்படி தலைப்பு கொடுத்து எழுதுவதை விட மறக்க முடியாத மனிதர்கள் என்று தலைப்பில் இதைக் கொண்டு வந்திருக்கலாம். இது என் வேண்டுகோள்தான். 
           இந்த இரண்டு புத்தகங்களும் பாரதி புத்தகாலயத்தில் விற்பனைக்ககு கிடைக்கும்.  தொலைபேசி : 044-24332424.




Tuesday, October 15, 2019

41வது நாளின் வாசிப்பனுபவம் (12.10.2019)


உணர்வுகளில் சிக்குண்ட கதைத் தொகுப்பு 


அழகியசிங்கர்




எல்லாச் சிறுகதைகளையும் படித்துவிட்டேன்.  ஒரே மூச்சாக. 15 கதைகள் கொண்ட தொகுப்பு.  இந்தச் சிறுகதை ஆசிரியர் ஒரு பெண்.  இவருடைய சிறுகதைகள் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரமாகவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.  ஆனால் அகல் என்ற மின்னிதழில் பிரசுரமரகியிருக்கிறது. 

மேற்கு மாம்பலத்தில் விஎம்எ ஹாலில் நூல் வெளியீடு. நானும் ஒரு பேச்சாளன்.  முதலில் தயக்கமாக இருந்தது.  புது சிறுகதை எழுத்தாளராக இருக்கிறாரே எப்படி சிறுகதை இருக்குமென்று.   ஆனால் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே எழுதியிருக்கிறார். 

நாம் எதிர்பார்க்கிற மாதிரிதான் கதைகள் எழுதப் பட வேண்டுமென்பதில்லை.  உதாரணமாக üரெஜித்தர் ஆபிஸ் மசிகுண்டுü என்ற கதையை எடுத்துக்கொள்வோம்.  இந்தக் கதையை நான் எழுதுவதாக இருந்தால் வேற மாதிரி எழுதியிருப்பேன்.  நான் எழுதுவதுதான் சரி என்று சொல்ல வரவில்லை. 

இந்தக் கதையில் ஒரு வரி வருகிறது.  üவாசல்ல கிடந்த திண்ணையிலேயே உக்கார்ந்து கிடந்தோம்.  உள்ள டொம் டொம்முன்னு அந்த மசிகுண்ட வெச்சு அடிச்சுக்கிட்டே இருக்காக.ý

எத்தனை வயல், எத்தனை வீடு ரெசிஸ்தர் ஆபீஸ்சுல  இருக்கிற மசிகுண்டு அத்தனையும் மாத்தி விடுவாத எழுதியிருக்கிறார்.  கூடவே உணர்ச்சிப் பெருக்கத்தை.  

ரெசிஸ்டர் அதிகாரி என்னிடம் கேட்டார்.  'முழுச்சம்மதத்தோடதானே இந்த இடத்தை அவருக்கு விக்கிறீங்க.'  இந்த இடத்தில் ஜெயந்தி ஜெகதீஷ் கதையை முடித்திருக்க வேண்டும்.

பல கதைகளில் இவர் பயன்படுத்துகிற வரிகள். அவற்றை கவனத்தில் கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது.  உப்புக் கோட்டையென சரிந்து விழுந்தது என்கிறார்.  இன்னொரு இடத்தில் ஒரு பட்டுப் பூச்சியை கூட ரசிக்க இயலாத ஒரு தலைமுறை என்கிறார்.   கொப்பரை என்கிற கதை.  ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக சேரும் ஒரு பெண். ஆரம்பத்தில் அவள் வைத்திருந்த கனவுகள் எல்லாம் மடமடவென்று சரிவதை காண்கிறாள். திருமணம் செய்வதற்கு வழியில்லை.  அப்போது கணக்கு வாத்தியார் மெய்யப்பன் தன் காதலை சொல்கிறார்.  அவருக்கு என்ன வயது?  40 வயதுக்கு மேல்.  அவர் செல்வந்தராக இருந்தும் அவரைப்பிடிக்கவில்லை.  ஒரு வரியில் கதையில் வெளிப்படுத்துகிறார். 'அவரைப் பார்க்கும்போது எனக்குள் ஒரு பொது கழிப்பிட நாற்றம் அடிக்கும்.'  இந்த வரியில் கதையே அடங்கி விட்டது. 

அந்தப் பெண்ணின் அம்மா யாராவது கிடைத்தால் போதும் திருமணம் செய்து கொண்டு விட வேண்டுமென்று நினைக்கிறாள்.  'ஒரு அபலையின் குரல் போல் ஒலித்தது அம்மாவின் குரல்.' என்று  முடித்துவிட்டிருக்கலாம் ஜெயந்தி ஜெகதீஷ் இன்னும் இழுத்துக்கொண்டு போகிறார். 

ஒவ்வொரு கதையையும் படிப்பவரை சிரமப்படுத்தாமல் கன கச்சிதமான வடிவத்துடன் முடித்து விடுகிறார்.  ஒரு 3  அல்லது 4 பக்கங்களுடன் முடித்து விடுகிறார்.  ஒரு சில கதைகள் பக்கங்கள் கூட.

üஎனக்குள் நான்ý என்ற கதை பெண்ணிற்கு இயல்பாக நடக்கும் கதை.  படிப்பவருக்கும் ஒரு பெண்ணின் வலியை உணரும்படி கொண்டு வருகிறார்.  அந்த வலியை ஏற்றுக்கொள்கிற பக்குவம் வேண்டுமென்றும் முடிக்கிறார்.

பொதுவாக ஜெயந்தி ஜெகதீஷ் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் ஆணை மையப்படுத்திததான் எழுதியிருக்கிறார்.  இந்தப் புத்தகத்தில் அவருடைய பெயரை எடுத்துவிட்டால் ஒரு பெண் எழுத்தாளர் கதை என்று சொல்ல மாட்டார்கள்.  அப்படி எழுதலாம் அப்படி எழுதுவதில் தவறில்லை.  ஆல்பர்டோ  மொரவியா என்ற இத்தாலி எழுத்தாளர்.   அவர் ஒரு ஆண் எழுத்தாளராக இருந்தாலும் பெண்ணை மையப்படுத்தித்தான் எழுதுவார்.  அவர் கதைகளில் பெண் பாத்திரங்கள்தான் முதன்மைப் படுத்தியிருக்கும். தி வுமன் ஆப் ரோம் என்ற நாவலைப் படித்தேன். ஒரு விலைமாதுவைப் பற்றிய கதை. பெண்ணின் உடல்மொழியை தத்ரூபமாகக் கொண்டு வருகிறார். 

üவேலைக்காரிý என்ற கதை.  அந்தக் கதை ஆரம்பிக்கும்போதே இப்படி ஆரம்பிக்கிறது. அந்த வீட்டு வேலைக்காரிக்கும் வீட்டு ஓனருக்கும் பாக்கம் என்று ஆரம்பிக்கிறது. இந்தக் கதையில் வேலைக்காரியைப் பற்றியும் ஓனரைப் பற்றி மூன்றாவது மனிதர் சொல்வதுபோல் வருகிறது.  இது நல்ல முயற்சி.

இன்னும் சில கதைகளில் ஆண் காதலிக்கிறான்.  மனம் விட்டு தன் எண்ணத்தைப் பெண்ணிடம் சொல்லத் தயங்குகிறான்.  பிரிந்து போய்விடுகிறார்கள். கனத்த மனதுடன்.  பிரிவு ஏற்படுத்தும் அழுத்தம் கதைகளில் வெளிப்படுகின்றன.

üஸ்ரீý என்ற கதை.  இக் கதையில் கண்ணிலாதவன் காதலிக்கிறான்.  சொல்ல தயக்கம்தான் இந்தக் கதை.  ஸ்ரீ ராகவ் விட்டுப் பிரிந்து போய்விடுகிறாள்.  இருவரும் தங்கள் எண்ணங்களை வெளிப்படையாக சொல்லவில்லை.  கண்ணீரை விடையாக அளிக்கிறார். இப்படி இன்னொரு கதையும் இத் தொகுப்பில் உள்ளது. 

நாற்பத்தைந்தாம் வயதில் காதல் வயப்படும் ஒரு பெண்ணின் கதை.  üமனவெளிý என்ற பெயர்.  ஒரு நடன நிகழ்வை வானதி பார்க்கிறாள்.  தன் பக்கத்து சீட்டில் வந்தமரும் ஸ்ரீனிவாசனுக்கு வயது 60 இருக்கும்.  அவரைப் பார்த்தவுடன் காதல் துளிர்க்கிறது. வானதிக்கு. அப்படிப்பட்ட அனுபவம் சிலருக்கு ஏற்படும்.  முதல் கதைத் தொகுப்பு என்பதோடல்லாம் எந்தக் கதையும் எந்தப் பத்திரிகைக்கும் எழுதவில்லை என்பது சற்று ஆச்சரியம்தான்.

இந்தச் சிறுகதைத் தொகுப்பின் விலை ரூ.130. தொகுப்பைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9445912564.
    


Monday, October 14, 2019

40வது நாளின் வாசிப்பனுபவம் (11.10.2019)

உலக சினிமா சில தரிசனங்கள் 



அழகியசிங்கர்




செந்தூரம் ஜெகதீஷின் புத்தக வெளியீட்டு விழா நேற்று (07.12.2019) இக்சா மையத்தில் நடந்தது.  அவர் சினிமாவைப் பற்றி இரண்டு புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறார்.  முதல் புத்தகம் உலக சினிமா சில தரிசனங்கள்.  இரண்டாவது  புத்தகம் இந்திய சினிமா சில தரிசனங்கள்.  இந்த இரண்டு புத்தகங்களையும் முழுவதும் படித்து கூட்டத்தில் பேச நினைத்தேன். ஒரு புத்தகம் 196 பக்கங்களும், இரண்டாவது புத்தகம் 92 பக்கங்களும் கொண்டவை.

நான் முதல் புத்தகத்தைத்தான் படித்தேன்.  இரண்டாவது புத்தகத்தை நுனிப்úபுல் மேய்ந்தேன். ஒருநாளில் படித்துவிட்டுப் பேச நினைத்தேன்.  இந்தப் புத்தகம் படிக்கும்போது எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றியது.  சினிமா என்பது ஒரு கலை.  அதில் பலருடைய ஈடுபாடு அவசியம்.  ஒவ்வொருவரும் அதில் எப்படி ஈடுபாடு கொள்கிறார் என்பது முக்கியம்.  

ஒரு வரியில் கதையைச் சொல்வதிலிருந்து பலர் உரையாடி கதையை உருவாக்குகிறார்கள்.  அந்தக் கதையை சினிமாவாக மாற்றுவதற்குள் கதை வடிவம் மாறிவிடும்.  பல நாட்கள் முயற்சி செய்கிறார்கள்.  இப்படி கதையாக சினிமாப்படம் உருவாகும்போது அதைத் திரையிட வேண்டுமென்றால் இன்னும் யத்தனம் வேண்டும்.

அதனால் சினிமாப்படம் தயாரிப்பதென்பது அசுரர்கள் உலகத்தைச் சார்ந்தது.  உழைப்பு, முதலீடு, எதிர்பார்ப்பு என்று வேற வழிக்குப் போய்விடும். அதிக முதலீடும் பலருடைய உழைப்பும் தேவைப்படும். ஆனால் இந்த எந்தக் கவலையுமில்லாமல் ரசனை அடிப்படையில் ஒரு சினிமாவை தியேட்டரில், டிவிடியில் பார்த்துவிட்டு அதை எழுதுவதற்கும் ஒரு திறமை வேண்டி உள்ளது. 

ஒரு வரியில் சொல்லப்பட்டு ஆரம்பிக்கிற கதை எல்லோருடைய உழைப்பால் சினிமாவாக மாறுகிறது.  அதைத் திரும்பவும் எழுத்துத் திறமை கொண்ட எழுத்தாளன் புத்தகத்தில் கொண்டு வரும்போது முழுத் திரைக்கதையைச் எழுதுகிறான்.  அவன் பார்வையில் அந்தக் கதை எப்படி வந்திருக்கிறது என்பதைப் பதிவு செய்கிறான்.

அந்த முயற்சியைத்தான் சினிமாவைப் பற்றி எழுதுகிற பலரும் செய்கிறார்கள். üவெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள்ý என்ற தலைப்பில் கோ.தனஞ்ஜெயின் எழுதியிருக்கிறார்.  அயல் சினிமா என்று எஸ் ராமகிருஷ்ணன் ஒரு புத்தகம் கொண்டு வந்திருக்கிறார், உலக சினிமா 1,2,3  என்ற தலைப்பில் செழியன் 3 பகுதிகள் கொண்ட புத்தகங்கள் கொண்டு வந்துள்ளார். இப்படிப் பல எழுத்தாளர்கள் சினிமாவைப் பற்றி தான் ரசித்ததைப் புத்தகங்களாகக் கொண்டு வந்துள்ளார்கள்.  

இந்தப் புத்தகங்களில் ஒரு சினிமாவை எப்படிப் பார்க்கிறோம்.  தாம் ரசித்த சினிமாக்களை எப்படி சொல்லியிருக்கிறோம் என்றெல்லாம் வருகிறது.  
செந்தூரம் ஜெகதீஷ் உலச சினிமா சில தரிசனங்கள் என்ற புத்தகத்தில் 40 படங்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.  இவையெல்லாம் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள்.    ஒவ்வொரு முறையும் தான் பார்த்து ரசித்தப் படங்களை மற்றவர்களும் ரசிக்க வேண்டுமென்று எழுதியிருக்கிறார்.  

இந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டியபோது அவர் குறிப்பிடுகிற 40 படங்களையும் நான் பார்க்கவில்லை என்பது எனக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.  சில நிமிடங்கள் இந்தப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு யோசித்தேன்.  இந்தப் புத்தகத்தை இப்படிப் படிக்கக்கூடாது என்று தோன்றியது.  இதில் குறிப்பிடப்படுகிற படங்களை ஒவ்வொன்றாய் நாமும் பார்த்து அவர் எழுதியதை ரசிக்க வேண்டுமென்று பட்டது.  மேலும் அவர் குறிப்பிடுகிற படங்கள் எல்லாம் யூ ட்யுப்பில் எளிதாகக் கிடைக்கிறது.  அதையெல்லாம் பார்த்துவிட்டு செந்தூரம்ஜெகதீஷ் எழுதியதையும் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர் சொல்வது சரியா இல்லையா என்பது உள்ளே போகும். அதாவது இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது எழுத்தைத்தான் படிக்க முடிகிறது.  அதன் மூலம் சினிமாவை உணர முடியவில்லை.

உதாரணமாக பாப் டைலானின் வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம் üஎதிர்ப்பே எனது பாடல்ý என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  ü80களின் தொடக்கத்தில் பாப்டைலானின் பாடல் ஒன்றை கேட்க நேரிட்டது.  கேட்டதுமே அப்பாடல் மனதுக்குள் ஒரு மழைச்சாரல் போல பொழிந்து வசந்தமாக பரவசமூட்டியது.ý என்று பரவசமாக எழுதுகிறார்.  இந்தப் படத்தை 80களில் பார்த்து இதுமாதிரி எழுதியிருக்கிறாரா என்பது தெரியவில்லை.   ஆனால் இப்போது இந்தப் படத்தைத் திரும்பவும் பார்த்தால் எது மாதிரியான எண்ணம் அவருக்குத் தோன்றும்? üபாப்டைலன் தற்செயலாய் கிடைத்த ஒரு வைரக்கல்.ý  இப்படி பல வரிகளை உணர்ச்சிகரமாக செந்தூரம் ஜெகதீஷ் இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் எழுதி உள்ளார். 

பல கட்டுரைகள் நீண்ட கட்டுரைகளாக இருக்கின்றன.  இன்னும் சுருக்கமாக எழுதப்பட்டிருக்க வேண்டுமோ என்று தோன்றியது.  சினிமா என்பது பார்ப்பதற்குத்தான்.  சினிமாவைப் பற்றிய கட்டுரைகள் சினிமாவைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்ட வேண்டும்.  ஒவ்வொரு சினிமா படத்தைப் பற்றியும் ஒரு அகராதி மாதிரி, மிகக் குறைவான வரிகளில் தயாரிக்க வேண்டுமென்று தோன்றியது.  இது சாத்தியமா என்பது தெரியவில்லை.    

செழியனின் உலக சினிமா என்ற புத்தகத்தைப் படிக்கும்போது உணர்ச்சி வசப்படாமல் கதையை விவரிக்கிறார்.  படிப்பவரை அந்தச் சினிமா படத்தை எப்படியாவது பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தை உருவாக்குகிறார்.  ஆனால் ஜெகதீஷ் தரிசனத்திற்குப் போய்விடுகிறார.  

40 படங்களை தன் புத்தகம் மூலம் அறிமுகப்படுத்திய செந்துரம் ஜெக்தீஷை நான் வரவேற்கிறேன்.  நான் இதுவரை அறிந்துகொள்ளாத 40 படங்கள் என்று அதிசயிக்கிறேன்.  இந்தப் புத்தகத்தை அவரே வெளியீட்டுள்ளார்.  புத்தகத்தின் விலை ரூ.150. தொலைபேசி எண் : 9444090037
 
 

Sunday, October 13, 2019

முப்பத்தொன்பதாம் நாளின் வாசிப்பனுபவம் (10.10.2019)



அழகியசிங்கர்





இந்த முறை டபுள் டக்கர் வண்டியில் பெங்களூர் பயணம் செய்தேன்.  பகலில்தான் நான் பயணிக்க விரும்புவேன்.  புத்தகம் படிப்பது என் வழக்கம். என்ன புத்தகம் படிப்பது என்பதைப் பற்றிச் சிந்தித்தேன்.  ஒரு தடியான புத்தகத்தை எடுத்துக்கொண்டு செல்வது என்று தீர்மானித்தேன்.
உடனே கண்ணில் பட்டது.  பா ராகவன் எழுதிய யதி என்ற நாவல்.  926 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை படிப்பது  சாதாரணமான விஷயமல்ல.  ஆனால் இம்மாதிரியான ரயில் பயணத்தின் போதுதான் இந்த நாவலைப் படிக்க முயற்சி செய்ய வேண்டும். 
வண்டியில் அமர்ந்தவுடன் தடியான புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு பிரித்தேன்.  உண்மையில் என்னுடன் பயணம் செய்பவர்கள் இம்மாதிரியான புத்தகத்தை எடுத்துப் படிக்கிறானே  என்று தெரியவேண்டும் என்று நினைத்தேன்.
யாராவது எதாவது கேள்வி கேட்பார்களா என்றுகூட ஆவலுடன் எதிர்பார்த்தேன்.  ஏமாந்து போய்விட்டேன்.  யாரும் கேட்கவில்லை. ஆனால் நான் அசரவில்லை.  யதியைப் படிக்க ஆரம்பித்தேன்.  கொஞ்சம் கண்ணைச் சுழட்ட ஆரம்பித்தது.  சரி தூங்குவோம் என்று தூங்கினேன்.  ஆனால் யதியை என் மடியில் வைத்துக்கொண்டு தூக்கம் போட்டேன்.
திரும்பவும் கண் விழித்தபோது யதி.  பக்கங்கள் வேகமாகப் புரண்டன. வண்டியை விட்டு இறங்கியவுடன் எனக்குத் திருப்தியாக இருந்தது. கிட்டத்தட்ட 200 பக்கங்கள் தாண்டி விட்டேன்.  நான் உறவினர் வீட்டு கிரஹப்பிரவேசத்திற்குத்தான் பெங்களூர் வந்தேன். 
உறவினர் வீட்டுக்கு வந்தபின்னும் யதியை விடவில்லை.  முதல் நாள் பூஜை. அடுத்தநாள்தான் கிரஹப்பிரவேசம்.  முதல் நாள் பூஜையின்போதே யதி புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டேன்.  
அங்கே யதி புத்தகத்தை எல்லோரும் பார்க்கும்படி பிரித்துப் படித்துக்கொண்டிருந்தேன்.  யாரும் என்னை அதிசயமாகப் பார்க்கவில்லை. என்னடா இவன் இத்தனை தடிப் புத்தகத்தைப் படிக்கிறானே என்ன என்று கேட்போம் என்று யாருக்கும் தோன்றவில்லை.  என்னை வினோதமான மனிதனைப் பார்ப்பதுபோல் பார்த்தார்கள்.
அடுத்தநாள் நிறையா பேர்கள் கிரஹப் பிரவேசத்திற்கு வந்தார்கள். ம்..யாரும் என்னைப் பொருட்படுத்தவில்லை.  கன்னடத்தில் பூஜை செய்யும் குருக்கள் மட்டும் என் புத்தகத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டு திரும்பவும் கொடுத்து விட்டார்.  அவர் கன்னடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தார்.  
மதியம் மேல் நானும் நண்பரும் ப்ளாசம்ஸ் போய் புத்தகங்களை வாங்கினோம்.  உண்மையில் ரூ.600 கொடுத்துத்தான் புத்தகங்கள் வாங்கினேன்.  இன்னும் கூட வாங்கியிருக்கலாமென்று தோன்றியது. ஹெம்மிங் வேயில்ன் கடைசி நாவல் ஐலெண்ட்ஸ் இன் த ஸ்டிரீம்) வாங்கிக்கொணடு வந்தேன். ப்ளாசம்ஸில் இது மாதிரி பழைய புத்தகங்கள் கிடைக்கும். ஆனால் விலையும் அதிகம்தான். 
என் நண்பர் என் பிறந்தநாளிற்கு ஒரு புத்தகம் அன்பளிப்பாகத் தந்தார்.  84 சாரிங்க க்ராஸ் ரோடு என்ற கடிதங்களால் ஆன நாவல். நான் அமெரிக்காவிலிருந்து வந்ததிலிருந்து ஆங்கில நாவல்களை முழுவதும் படித்ததில்லை. 
அடுத்தநாள் நான் பாரதி மணி வீட்டிற்கு நண்பரோடு சென்றேன்.  அவர் சில புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுத்தார்.  திரும்பவும் சென்னை.  இந்தமுறை லால்பாக்.  லால் பாக் வண்டியில் உட்கார்ந்து வருவது சௌகரியமாக இருக்கிறது.  காலை நன்றாக நீட்ட முடிகிறது.  நான் ஜன்னல் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன்.  என் பக்கத்திலிருந்தவர்கள் ரொம்ப பருமனாக இருந்தார்கள்.  அவர்களைத் தாண்டிப் போவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.   திரும்பவும் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டேன்.  படிக்க ஆரம்பித்தபிறகு நேரம் போனதே தெரியவில்லை.
ஆனால் சென்னை வந்திறங்கியபோது 533 பக்கங்கள்தான் படிக்க முடிந்தது.  இன்னும் 925 பக்கங்கள் இருக்கின்றன.  இந்த நாவலைச் சிறப்பாக எழுதியிருக்கிறார் ராகவன்.  யதியைப் படிக்கும்போது எனக்கு இன்னும் இரண்டு நாவல்கள் ஞாபகத்திற்கு வந்தன.  ஒன்று: அசோகமித்திரனின் மானசரோவர்.  இரண்டாவது க.நா.சுவின் அவதூதர்.  நான் குறிப்பிடுகிற இந்த இரண்டு நாவல்களுக்கும் யதிக்கும் எந்த சம்பந்தமுமில்லை.  இந்த நாவலைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நாவலை முடித்துவிட்டுத்தான் சொல்லவேண்டும்.  தமிழுக்கு இது புதிய முயற்சி என்று படுகிறது. எல்லோருக்கும் புரிகிற மாதிரி சரளமான நடையில் எழுதியிருக்கிறார்.
    

Saturday, October 12, 2019

முப்பத்தெட்டாம் நாளின் வாசிப்பனுபவம் (09.10.2019)


அம்பையின் சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை



அழகியசிங்கர்




இன்றுதான் முடித்தேன். ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டேன்? இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதுதான் நானும் சில புத்தகங்களைக் கொண்டு வர வேண்டியிருந்தது.  நாவலை முடிக்க வேண்டியிருந்தது. படிப்பதில் கவனம் இல்லை.  ஆனால் ஒவ்வொரு சிறுகதையையும் ஒவ்வொரு நாளும் எடுத்து வாசித்துவிடுவேன்.  

நான் புத்தகக் காட்சி போது அம்பையின் எந்தப் புத்தகம் வந்தாலும் வாங்கி விடுவேன். இந்த ஆண்டு ஜனவரி மாதம் வாங்கியது ஒரு சிறுகதைத் தொகுப்பு  'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை.'

168 பக்கங்களில் 13கதைகள் கொண்ட தொகுப்பு.  உள்ளிருந்து புற உலகைப் பார்பதற்கான சன்னல் எனும் திறப்பு தொடர்ந்து தன் வாழ்க்கையின் முக்கிய அம்சமாகக் கருதுவதாக அம்பை குறிப்பிடுகிறார்.  அதேபோல் இவருக்குப் பயணம் செய்வதில் அலுப்பே ஏற்பட்டதில்லை போல் தோன்றுகிறது.  இத் தொகுப்பில் பயணம் 21, பயணம் 22, பயணம் 23 என்று பெயரிட்ட கதைகள் இருக்கின்றன.  

நான் முதலில் இத்தொகுப்பில்  'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை,' என்ற சிறுகதையைத்தான் படித்தேன்.  அந்தக் கதையûப் படித்த தேதி 31.10.2019.  அதன் பின்  10.11.2019 முழுப் புத்தகத்தைûயும் படித்து முடித்தேன்.

33பக்கங்கள் கொண்ட இது சிறுகதை என்பதை விடக் குறுநாவல் என்று தோன்றுகிறது.  காது செவிடாக உள்ள ஒரு பெண்ணின் கதை.   எனக்கு என்னமோ உலகத் தரமான கதைகளில் இதைச் சேர்க்க வேண்டுமென்று தோன்றுகிறது.   இப் புத்தகத்தின் 62 பக்கத்தில் காது செவிடாக இருப்பவர்களின் அவதியைச் சொல்கிறார்: 'செவிக்கருவி மூலம் ஒலிச்சொட்டுகள் விழும்.  அவை சூடானவை நெருப்பாய்ச் சுடுபவை.  ஒலி ஒரு சாட்டை.  வலியைத் தருவது.  அதுதான் ஒலியுடன் எங்கள் உறவு.  எங்கள் உலகில் வண்ணங்கள் உண்டு.  காட்சி உண்டு.  மண் சிவப்பு.  ரத்தச் சிவப்பு. அரக்குச் சிவப்பு.  குங்குமச் சிவப்பு.'

சிறு குறிப்பு ஒன்றை விட்டுச் சென்றிருந்தான் வசந்தன் என்று ஆரம்பமாகும் இந்தக் கதை.  மைதிலி - வசந்தன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள்.  அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. அப்போதுதான் ஆஸ்பத்திரியில் ஒரு அனாதை குழந்தை கிடைக்கிறது.

  அதற்கு தேன் மொழி என்ற பெயரை வைத்து குழந்தையை வீட்டிற்கு அழைத்துப் போகிறான்.  அந்தக் குழந்தைக்குக் காது கேட்காது.  காது கேட்காத ஒரு பெண் குழந்தையை வளர்க்கிற பாட்டை கதை விவரித்துக்கொண்டு போகிறது. 

காக்ளியர் அறுவைச் சிகிச்சையை ஏற்க மறுத்துவிடுகிறாள் தேன்மொழி.  வசந்தனுக்கு ஏமாற்றம்.  பிரிந்து விடுகிறான். கடைசிவரை அவனைத் தேடித் தேடிப் போகிறார்கள்.  வசந்தன் கிடைக்கவில்லை.  உண்மையில் காது கேட்காத பெண்ணை அவன் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. 

இறுதியில் கதை இப்படி முடிகிறது.  மொழி ஒரு தொடர்பு.  ஒலி இல்லாமலும் அது  நேரலாம்.  
தேன்மொழி, மைதிலி, வசந்தன்.   

'தொண்டை புடைத்த காகம்' ஒன்று என்ற கதையில்  சன்னல் வழியாக வரும் காக்கை வித்தியாசமான காக்கையாக இருக்கிறது.   மழைக் காலங்களில் சமையலறை சன்னல் மீதுதான் இருப்பு. உப்பு பிஸ்கோத்து போடாமல் க்ளூகோஸ் பிஸ்கோத்து போட்டால் நிமிர்ந்து பார்த்து தலையைத் திருப்பிக்கொள்ளுமாம்.  வறுவல் என்றால் உயிராம். இன்னும் கேட்கும். பதிலுக்குத் தன் வாயில் வைத்திருக்கும் எலும்பு எதையாவது சன்னல் படிக்கட்டில் வைத்துவிட்டுப் போய்விடும். 

ஒருநாள் காகம் கத்துவதைக் கேட்டபோது அது காகம்தானா என்ற சந்தேகம் வருகிறது.

அப்படியே இந்தக் கதை அப்பாவிடம் ஆரம்பிக்கிறது.  சாப்பாடு சாப்பாடு என்று அப்பா கத்துகிறார்.  அவருக்கு எதுவும் ஞாபகம் இருப்பதில்லை. அப்பாவின் ஞாபகமறதியிலிருந்து ஒரு பெரிய குடும்பக் கதையை விவரிக்கிறார்.  ஒரு மாலை பொழதில் அப்பா காணாமல் போய்விடுகிறார்.  பின் அவரைக் கண்டுபிடித்து ஒரு நர்ûஸ வைத்துப் பார்த்துக்கொள்கிறாள்.  

இரண்டு காதல்களின் தோல்வி, அம்மா விசாலம், அப்பா என்று பலத்த அலைகளாக நினைவுகள் மோதுகின்றன.  அந்தச் சமயத்தில் சன்னலோரம் வந்த காக்கையைக் கோபத்துடன் விரட்டி விடுகிறாள்.  அதன்பின் காக்கை வரவில்லை.  பேருந்தில் ஒரு முறை போய்க்கொண்டிருக்கும்போது ஒரு காக்கை பஸ்ஸில் அடிப்பட்டு உயிரை விடுகிறது. காக்கையை மட்டும் கூறுவதல்ல இந்தக் கதை.  காக்கை மூலம் எல்லாமும் வருகிறது.  

பயணம் 21, 22, 23 என்று மூன்று கதைகள்.  மூன்றும் மூன்று பயண அனுபவங்கள். கட்டுரைகளா? கதைகளா? நகுலன் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வரும் நிகழ்ச்சியை கதையாக மாற்றி இருக்கிறார்.  அதே போல் முயற்சியா இது.  பயணம் 23 பற்றி சொல்ல வேண்டும்.  கதையில் ஒரு இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.  üஎதை எடுத்தாலும் அதன் பொருள் அடுக்குகளின் கீழே எல்லாவற்றையும் அர்த்தப்படுத்தும் அடிப்படை உணர்வான பாலியல்தான் இருந்தது.

இன்னொரு இடத்தில் பாரதியின் அக்கினிக் குஞ்சு என்ற கவிதையை மோசமாகக் கிண்டல் அடிக்கிறார்.  வக்கிரமான உணர்வை வெளிப்படுத்துகிறார் என்று கூட கூறலாம். இதோ:

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

இதற்கு விளக்கம் தருகிறார்.  அக்னிக் குஞ்சு ஆண் குறியாம், காட்டிலோர் பொந்து பெண்ணுடைய யோனியாம், வெந்து தணிந்தது காடுý கலவி உச்சத்தைக் குறிக்கிறது.  தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் கலவி இயக்கத்துடைய தாள கதியாம்.. பாரதி பாடலை இவ்வளவு மோசமாக யாரும் கிண்டல் செய்திருக்க மாட்டார்கள்.  பாரதி படித்தால் தற்கொலை செய்துகொண்டு விடுவார்.

üசாம்பல் மேல் எழும் நகரம்ý என்ற கதையை இரண்டு முறைக்குமேல் படித்தேன்.  என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.  அம்பையின் கதை பெண்களைப் பற்றிச் சுழலுகிறது.  துயரம்தான் அதிகம்.  நகைச்சுவை உணர்வு மிகவும் குறைவு.  பயணத்தைப் பற்றியே பெரும்பாலும் கதைகள் இருக்கின்றன.   இப்புத்தகம் காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கிறது.  விலை ரூ.195.



Friday, October 11, 2019

முப்பத்தேழாம் நாளின் வாசிப்பனுபவம் (08.10.2019)




அழகியசிங்கர்





முதலில் ஒரு புத்தகத்தை எடுத்துப்படிப்பதற்கு முன் பக்கங்களை எண்ணிப் பார்க்கிறேன்.  இந்தப் புத்தகத்தை எத்தனை நாட்களில் படிக்க முடியும்? இதைப் பற்றி எதாவது எழுத முடியுமா என்றெல்லாம் பார்க்கிறேன். என் மனசில் எப்படிப் படுகிறதோ அப்படியே புத்தகம் பற்றி சொல்கிறேன். இதில் எந்தத் தியரியையும் இணைக்கவில்லை.  உண்மையில் தியரி புத்தகத்தையும் படித்துக் குறிப்பிட விரும்புகிறேன்.  
இரண்டு நாட்களாக படித்தப் புத்தகம் 'சித்தார்த்தா'  என்ற புத்தகம். 'ஹெர்மன் ஹெஸ்ஸி'ன் புகழ்பெற்ற நாவல் இது.  தமிழில் மொழி பெயர்த்தவர் ஜெகதா.   பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலத்தில் இந்த நாவலைப் படித்திருக்கிறேன்.  எல்லாம் மறந்து விட்டது.  சில நாவல்களை நாம் பலமுறை படித்துக்கொண்டிருக்க வேண்டும்.  அது மாதிரியான நாவல்களில் இது ஒன்று.  
ஜெகதா நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.  சிறுகதை, நாவல், கவிதை, சினிமா, வரலாறு, ஆன்மிக ஆய்வு என்று பல துறைகளில் புத்தகங்கள் எழுதி உள்ளார். 
பிரபஞ்ச ரகஸ்யங்களை அதன் அடையாளங்களை நதியிடமிருந்து கற்றுக்கொள்ளும் படகோட்டியாய் இந்த நாவல் எல்லையற்ற ஞானவெளியில் நம்மையெல்லாம் மாணவ நிலையில் அமரச் செய்கிறது. 
சித்தார்த்தாவும் கோவிந்தனும் நண்பர்கள்.  பக்கத்து பக்கத்து வீடுகளில் இருவரும் வசிக்கிறார்கள்.  சித்தார்த்தனுக்கு கடவுளுக்கு ஹோமம் செய்வது நைவேத்தியம் படைப்பது வணங்குவது எதுவும் பிடிக்கவில்லை.  மனோ வலிமை பெற்றவனே ஆத்ம தரிசனம் பெறுவான் என்று நம்புகிறான் சித்தார்த்தா.  அப்பாவிடம் வலுகட்டாயமாக அனுமதி பெற்று பைராகிகளுடன் ஞானத்தைப் பெற பயணம் செய்கிறான்.  அவனுடன் கோவிந்தனும் வருகிறான்.
உலகம் மாயையாகத் தோன்றியது.  எல்லாவற்றிலும் போலித்தன்மை தெரிந்தது.  வாழ்க்கையின் சகலத்திலும் வஞ்சம் நிறைந்திருப்பது போல் தோன்றியது.  ஆழிவும் வேதனையும் வாழ்க்கை அவதாரமாகக் கொண்டதாக சித்தார்தன் நினைத்தான்.   பைராகிகளோடு திரியும் வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருந்தது.  ஓய்வு என்பதே இல்லாது ஒரே அலைச்சலாக இருந்தது. üநான்ý என்ற உணர்வைத் துறப்பதற்கு மிருகத்தைப் போலவும் மரக்கட்டை போலவும் நீண்ட காலத்தை செலவழித்த பின்னரும் மீண்டும் அந்த 'நான்' என்ற வாழ்க்கை வளையத்திற்குள்தான் வரúவ்ண்டியுள்ளது.  
சித்தார்தாவிற்கு பைராகிகளோடு சுற்றுவதும் பிடிக்கவில்லை. கோவிந்தனும் அவனும் 3 வருடங்கள் மேல் ஆகிவிட்டது. பைராகிகளிடமிருந்து விடுதலை பெற நினைக்கிறார்கள் சித்தார்தாவும் கோவிந்தும்.
பிறகு அவர்கள் புத்தரை சந்திக்கச் செல்கிறார்கள்.  புத்தர் முன்பாகப் போய் நின்று, 'உங்களது உபதேசங்களை முழு மனதுடன் ஏற்று தங்களது சீடனாக நான் விரும்புகிறேன்.' என்கிறான் கோவிந்தன். புத்தரும் அவன் விருப்பப்படி அவனை சீடனாக ஏற்றுக் கொள்கிறார்.  சித்தார்தனுக்கு அப்படி சேர விருப்பமில்லை.  தனியாக வந்து விடுகிறான். 
ஆற்றின் மறுகரைக்குக் கொண்டு சென்று விட்டுவிடுமாறு வேண்டிக் கொண்டான் சித்தார்த்தன் படகோட்டியிடம்.  
படகோட்டி சித்தார்தனிடம் சொல்கிறான் : "இந்த நதி அழகுடையதுதான் இந்த உலகத்தில் யாவற்றையும் விட இந்த நதியை நான் மிகவும் விரும்புவேன்.  அலைகள் ஒவ்வொன்றும் புதிய புதிய செய்தியை எனக்குச் சொல்லியிருக்கிறது.  மனித வாழ்வின் துயரப் போராட்டங்களுக்குத் தீர்வு சொல்லக்கூடிய ஞானத் திரவியங்கள் இந்த நதியின் ஆழத்தில் உள்ளது," என்கிறான் படகோட்டி.
'நான் ஒரு பைராகி.  படகுப் பயணம் வந்ததற்கு என்னால் எதுவுமே கொடுக்க இயலாது என்கிறான் சித்தார்த்தா.  
மூன்றாவதாக தேவதாசி கமலாவை சந்திக்கிறான்.   பைராகி தோற்றத்தை துறந்து ஷேவ் செய்துகொண்டு புத்தம் புதிய தோற்றத்துடன் போய்ப் பார்க்கிறான் சித்தார்த்தா.  
"எனக்கு கவிதை எழுதத் தெரியும்.  நான் கவிதை சொன்னால் நீங்கள் எனக்கு முத்தம் தருவீர்களா?" என்று சித்தார்த்தன் தேவதாசி கமலாவிடம் கேட்கிறான்.  
"நீங்கள் சொலகிற கவிதை எனக்குப் பிடிக்க வேண்டும்.  பிடித்திருந்தால் முத்தம் தர ஆட்சேபணை இல்லை,"என்கிறார் கமலா.
கவிதை அவளுக்குப் பிடித்துப் போகிறது.  உதட்டில் முத்தமும் கிடைக்கிறது சித்ததார்தனுக்கு.
சித்தார்த்தாவை காமசாமி என்கிற பணக்கார வியாபாரியைப் பார்க்கச் சொல்கிறாள். 
'காமசாமிக்கு இணையாகப் பார்க்க ஆசைப்படுகிறேன்.  பணமும் செல்வாக்கும் உள்ள அவரை அடிமை கொள்ளுங்கள்,' என்கிறாள் கமலா. 
"வசீகர சக்தி உங்களிடம் ஏதும் உள்ளதா சித்தார்த்தா?" என்று கேட்கிறாள் கமலா.
"எனக்கு காத்திருக்கவும், சிந்திக்கவும், உபவாசம் இருக்கவும் தெரியும்," என்கிறான் சித்தார்த்தா.
தேவதாசி கமலாவுடன் லௌகீக வாழ்க்கையில் முற்றிலுமாய் கரைந்து சித்தார்த்தான் அனுபவித்துத்தான் வந்தான்.  ஆனாலும் அவனுள் ஒரு நிம்மதியற்ற தவிப்பு தொடர்ந்து இருந்துகொண்டே யிருந்தது.
வியாபாரத்தில் சித்தார்த்தன் நிறையா சம்பாதித்தான்.  மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டுமென்ற வெறி அவனுக்குள் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் சூதாட்டத்தில் பணத்தை சம்பாதிப்பதும் இழப்பதும் வழக்கமாக இருந்தது.  பணம் சம்பாதிப்பதே ஒரே நோக்கமாகக் கொண்ட அவன், மிகச் சராசரி மனிதனாக மாறிவிட்டான்.
ஒருநாள் மாடமாளிகைகள், நகருக்குள் இருந்த ஆடம்பர மாளிகை வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்ட படுக்கை அறையும் விதவிதமான உணவுபொருட்களையும் விட்டுவிட்டு சித்தார்த்தன் பட்டணத்தை விட்டு கிளம்பி விட்டான்.
சித்தார்த்தன் காணமல் போய்விட்டான் என்பதை அறிந்தவுடன் மறுநாளிலிருந்து தனது தாசித்தொழிலை விட்டுவிட்டாள்.  அதற்காகப் பயன்படுத்திய அறையையும் பூட்டி விட்டாள்.  கடைசி முறையாக சித்தார்த்தனுடன் கொண்ட உடலுறவில் அவள் கர்ப்பமுற்றுருந்தாள்.
காட்டில் சித்தார்த்தன் சுற்றிக்கொண்டிருக்கும்போது அவனுடைய நண்பன் கோவிந்தனை சந்திக்கிறான்.  கோவிந்தனோ புத்தரோடு ஐக்கியமாகிவிட்டான்.  திரும்பவும் முன்னே சென்ற ஆற்றங்கரைக்கு வருகிறான்.  எஞ்சியுள்ள தன்னுமடைய வாழ்நாளை 
இந்த ஆற்றங்கரையிலேயே முடித்துக்கொள்ள வேண்டியதுதான் என்று சித்தார்த்தன் நினைக்கிறான்.
ஆற்று நீரின் சலசலப்புச் சத்தம் சித்தார்த்தனின் அந்தராத்மாவின் மீண்டும் ஓங்கார நாதத்தின் மந்திர தொனியை மீட்டுகிறது. 
நதி ஒரு  ரகசியத்தை மட்டும் சித்தாத்தனுக்குச் சொல்கிறது.
இந்த ஆற்று வெள்ளம் நிரந்தரமானது என்றாலும் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு துளியும் புதியது என்ற உண்மையை புரிந்து கொண்டான் சித்தார்தன்.
ஏற்கனவே அந்த ஆற்றில் இருக்கும் படகோட்டியைத் திரும்பவும் பார்க்கிறான் சித்தார்த்தன்.  ஆடம்பரமாய் தரித்திருக்கும் தன் உடைகளை படகோட்டியிடம் கொடுத்து விடுகிறேன் என்கிறான் சித்தார்த்தன்.  அவனை ஆச்சரியத்தோடு பார்த்த படகோட்டி அவனை சித்தார்த்தன் என்று அடையாளம் காண்கிறான்.  படகோட்டி தன்னை அறிமுகப்படுத்துகிறான் வாசுதேவன் என்று.
கடைசி வரை சித்தார்த்தன் எதிலும் திருப்தி இல்லாமல் இருக்கிறான் சித்தார்த்தன்.  தன்னுடைய பழைய கதைகளை எல்லாம் சித்தார்த்தன் வாசுதேவனிடம் சொல்கிறான்.  பின் வாசுதேவன் சித்தார்த்தைப் பார்த்துச் சொல்கிறான்.üüநதி உங்களிடம் பேசியிருக்கிறது. உங்கள் மீது அன்பு காட்டியிருக்கிறது.  நீங்கள் என்னுடன் தங்கலாம்.  என்னுடைய மனைவி இறந்து பல ஆண்டுகளாகி விட்டது.  இந்தக் குடிசையில் நான் மட்டும் இருக்கிறேன்.  நீங்களும் என்னுடன் தங்கலாம்ýýஎன்கிறான் வாசுதேவன்.
வாசுதேவனுடன் சேர்ந்து படகு கட்டுவதைக் கற்றுக்கொள்கிறான்.  தோட்டத்தில் செடிகொடிகள் போடுகிறான். காட்டுக்குப் போகிறான். இப்படி எல்லா விதங்களிலும் உதவியாய் இரக்கிறான் வாசுதேவனுக்கு.  
எலலாவற்றையும் கற்றுக் கொடுக்கிறது நதி.  எல்லாவற்றையும் மறந்து கூர்ந்து கவனிக்கும் ஆற்றலையும் மனம் சஞ்சலமடையாதத் தன்மையும் நதி சொல்லிக் கொடுக்கத்தான் செய்கிறது.  ஒருமுறை புத்தர்பிரான் நோய்வாய்ப்பட்டு படுத்தப் படுக்கையாக இருக்கிறார்.  அவரைப் பார்க்க புத்த பிட்சுகள் மஞ்கள் உடை அணிந்து சாரி சாரியாக வருகிறார்கள்.
அவர்களுடன் தேவதாசி கமலாவும் அவள் பையனை அழைத்துக்கொண்டு வருகிறாள்.  புத்தர்பிரானைப் பார்க்க.  தேவதாசி கமலா அவளுடைய எல்லா செல்வத்தையும் புத்தர்பிரானுக்கு அர்பணித்து விடுகிறாள்.  அவளுடைய பையனுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை.  ஏன் இந்தக் கிழவனைப் பார்க்க இவ்வளவு தூரம் வருகிறாய் என்று திட்டுகிறான் அம்மாவை. 
சித்தார்த்தனும் மரணப்படுக்கையில் இருக்கும் புத்தர்பிரானைப் பார்க்க வருகிறான்.  அவன் கமலாவையும் தன் மகனையும் பார்க்கிறான். 
தன் பையனின் தொந்தரவு தாங்கமுடியாமல் போகிற வழியில் ஒரு இடத்தில் தங்குகிறாள்.  ஒரு புல்தரையில் அவளை அறியாமல் தூங்கி விடுகிறாள்.  அப்போது ஒரு கரும்பாம்பு அவளைத் தீண்டி விடுகிறது.  ஓ என்று கத்துகிறாள்.  அவள் பையன் துடித்துவிடுகிறான்.  அந்த இடத்தில் யாருமே இல்லை.  படகுகாரன் வாசுதேவன் வேற வழியில்லாமல் அவளை தூக்கிக்கொண்டு வந்து படகில் கிடத்துகிறான். அவளை தன் குடிசைக்கு அழைத்து வருகிறான்.
கமலாவை சித்தார்த்தன் சந்திக்கிறான்.  கமலாவிற்கு ஆச்சரியம் சித்தார்த்தனை சந்திப்போம் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.  பால சித்தார்த்தனை சித்தார்த்தனிடம் விட்டுவிட்டு கமலா இறந்து விடுகிறாள்.  
அம்மாவின் மரணம் பால சித்தார்த்தனுக்குப் பேரிழப்பாக இருக்கிறது.  அவளை சிதை மூட்டிய குன்றுப் பகுதிக்குச் சென்று ஓவென இடைவிடாது அழுதான்.
சித்தார்த்தனை இதுவரை பார்த்ததில்லையாதலால் பால சித்தார்த்தனுக்கு தந்தை பாசம் என்று எதுவும் ஏற்படுவதில்லை.  அவனை சரியாக கமலா வளர்க்கவில்லை என்பதை சித்தார்ததன் உணர்ந்தான்.  அவனுக்கு எந்தக் காரியம் செய்வதற்கும் உதவியாள் தேவைப்பட்டது. 
ஒருமுறை சித்தார்த்தனைப் பார்த்து பால சித்தார்த்தன் சொல்கிறான் : "உங்களைப் பழி வாங்க ஒரு கொலைகாரனாக மாறி நான் நரகத்திற்குப் போவேன்.  நீங்கள் என் அம்மாவுடைய காதலன் மட்டுமே.  நீங்கள் ஒரு போதும் என் அப்பாவாக முடியாது." 
மறுநாள் காலை பால சித்தார்த்தான் அங்கிருந்த படகை எடுத்துக்கொண்டு அக்கறைக்குப் போய்விட்டான்.  படகில் உள்ள துடுப்புகளை நாசம் செய்து விட்டுப் போய்விட்டான்.  தன் பையன் தன்னை விட்டுப் போனதை சித்தார்த்தனால் மறக்க முடியவில்லை.  அவனை யொத்த பையன்களைப் பார்த்கும்போது அவன் பைன் ஞாபகம் வரகிறது.  
'இப்போது நதி பேசுகிறது.  முடிவு மற்றும் தொடக்கம் என நதி கருதுவதெல்லாம் நிஜமாகவே நிகழ்கிறது.  சந்தோஷம், துயரம் எல்லாமே ஒன்றுதான் என்று நதி தீரிமானித்தது.'
சின்ன வயதில் தன் அப்பாவை விட்டுவிட்டு வந்ததை சித்தார்த்தன் ஞாபகப்படுத்திக் கொள்கிறனர்.  அவன் முழுவதும் மாறி விடுகிறான்.  வாசுதேவன் அவனை விட்டு, குடிசையை விட்டுவிட்டு, ஓட்டிவந்த படகை விட்டு விட்டு காட்டுக்குப் போய் விடுகிறான் இன்னும் ஞானத்தைத் தேடி.
ஆற்றங்கரையில் படகோட்டியாக ஆருளொளி ததும்பிய யோகீஸ்வரர் ஒருவர் இருப்பதாக கோவிந்தனிடம் பலரும் சொலலியிருக்கிறார்கள்.  கோவிந்தன் அந்த யோகீஸ்வரரைப் பார்க்க  வந்திருக்கிறான். 
சித்தார்தனுக்கு அவன் கோவிந்தன் என்று அடையாளம் தெரிந்து விடுகிறது.  கோவிந்தனுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை.  
கோவிந்தனைப் பார்த்துச் சொல்கிறான் சித்தார்த்தன். "தேடுபவர்கள் எல்லாம் தாங்கள் தேடுவதை மட்டும் தேடிக் கொண்டிருப்பார்கள்.  அதனை மட்டுமே உற்று கவனித்துக் கொண்டிருப்பவர்கள் மற்றவற்றைப் பார்க்கவும் புரிந்துகொள்ளவுமான தங்களது வலிமையை இழந்து விடுகிறார்கள்." 
கோவிந்தன் சித்தார்த்தனுடன் குடிசையில் தங்குகிறான்.  வாசுதேவன் விட்டுச் சென்ற கட்டிலில் படுத்துக்கொள்கிறான்.  காலையில் எழுந்து விடை பெறும்போது, சித்தார்த்தன் அவன் நெற்றியில் முத்தம் இட சொல்கிறான்.  
தான் முத்தமிட்ட அந்தக் கருணை பொங்கும் முகத்தை கோவிந்தன் அசைவற்று பார்த்தபடி அவன் பாதம் தொட்டான்.
ஹெர்மன் ஹெஸ்ஸியின் இந்த நாவல் உலகப் பிரசித்துப் பெற்ற நாவல்.  ஒவ்வொருவரும் இதை அவசியம் படிக்க வேண்டும்.  ஒரு முறை மட்டுமல்ல பல முறை படித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் சித்தார்த்தின் அலைச்சல் நமக்குப் புரியும்.  நம்மிடம் கூட சித்தார்த்தின் தன்மை இருக்கிறது.  இது ஒரு ஆன்மிக நாவல். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த நாவல் பல விஷயங்கள் மூலம் பலவற்றைத் தெரிந்து கொள்ளலாம். படிப்பவரையே புரட்டிப் போடக் கூடிய நாவல் இது. 
சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் மூலம் தமிழில் ஜெகாதா மொழி பெயர்த்துள்ளார். 110 பக்கஙகள் கொண்ட இந்த நாவல் விலை ரூ.35தான்.2007ஆம் ஆண்டில்.
  

Thursday, October 10, 2019

முப்பத்தாறாம் நாளின் வாசிப்பனுபவம் (07.10.2019)



ழகியசிங்கர்




இரண்டு நாட்களாக நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் நாட்டுக்கு உழைத்த நல்லவர் வரிசையில் கஸ்தூர்பா காந்தியைப்பற்றி எம் வி வெங்கட்ராம் எழுதிய புத்தகம்.

இந்தத் தலைப்பில் பல புத்தகங்களைத் தாயாரித்திருக்கிறார் எம் வி வெங்கட்ராம்.  74 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் ஒரு அரிய பொக்கிஷம்.  நம் நாட்டுத் தலைவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகளை ஓரளவு விரிவான வழியில் எழுதியிருக்கிறார் எம்.வி வெங்கட்ராம்.  18 தலைப்புகளில் கஸ்தூர்பா காந்தியின் வாழ்க்கை யை நம் கண் முன் நிறுத்துகிறார் எம் வி வெங்கட்ராம்.
பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ள இப் புத்தகத்தை ஒவ்வொருவரும் வாங்கிப் படிப்பது அவசியம்.  இந்தப் புத்தகத்தின் விலை ரூ.35தான்.

குஜராத் மாகாணத்தில் போர்பந்தர் என்னும் நகரத்தில் கோகுல்தாஸ் மாகன் ஜீ, விரஜகும்வர்பா என்ற தம்பதிகளுக்கு மூத்த மகளாய்  அவதரித்தவர் கஸ்தூர்பா.  அவர் 1869ஆம் ஆண்டு பிறந்தார்.  மகாத்மாவைவிட ஆறுமாதம் மூத்தவர்.  அக்காலத்தில் பெண்களைப் படிக்க வைக்கும் வழக்கம் பெரும்பாலும் கிடையாது.   கஸ்தூர்பாவும் பள்ளிக்கூடத்தின் பக்கமே போகவில்லை.  ஆனால் குடும்ப வேலைகளில் பயிற்சி இருந்தது.  காந்திஜிக்கும், கஸ்தூர்பாவிற்கும் 13 வயதில் திருமணம் நடந்தது.

காந்திஜியை நெறிப்படுத்திய பெருமை கஸ்தூரி பாவுக்கு உண்டு. காந்திஜி உயர்தரப் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஒரு தீய நண்பனோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.  அந்த நண்பனோடு சேர்ந்துகொண்டு கஸ்தூர்பாவின் கற்பொழுக்கம்மீதே சந்தேகம் கொண்டார்.  பின்னர் தன் குற்றத்தை ஏற்கிறார் காந்திஜி. அவர் மனைவியிடம் செய்த பல தவறுகளுக்காக அவருக்குப் பச்சாதாபம் எற்பட்டு தந்தையிடம் மன்னிப்புப் பெற விழைந்தார்.  நேரிடையாக கஸ்தூர்பாவிடம் மன்னிப்புக் கேட்க அவருக்கு வெட்கமாக இருந்தது.

சிற்றின்ப நாட்டத்தினால் கடைசிக்காலத்தில் தந்தையாருக்குப் பக்கத்தில் இருக்க முடியாமல் போனதைப் பற்றி காந்திஜி வெகுகாலம் வருத்தப்பட்டார். காந்திஜி செம்மையாகப் படித்து பாரிஸ்டராகி விட்டார்.  ஆனால் மனைவியிடம் சந்தேகப்படுவதை நிறுத்தவில்லை.  உண்மையில் கஸ்தூர்பா மட்டுமல்லாமல் வேற யாராவது இருந்திருந்தால் காந்திஜியின் தொந்தரவு தாஙக் முடியாமல் காந்திஜியை விட்டுப் போயிருப்பார்கள். காந்திஜியை மகாத்மாவாக உருவாக்கிய பெருமை கஸ்தூர்பாவைத்தான் சேரும்.

தன் வக்கீல் தொழிலை சரிவர இந்தியாவில் தொடர முடியவில்லை. அதனால் காந்திஜி தென்னாப்பிரிக்காவிற்குப் பயணம் ஆகிறார். ஒரு வருடத்திற்குள் மறுபடியும் சந்திப்போம் என்று காந்திஜி மனைவிக்கு ஆறுதல் கூறிவிட்டு விடை பெற்றார்.  பிரிவுத் துயரை கஸ்தூர்பா ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.  அப்போது அவருக்கு வயது இருபத்துநான்கு.

ஓராண்டு தங்கும் எண்ணத்தோடு போனவர் மூன்றாண்டுகள் தென்னாப்பிரிக்காவில் தங்கிவிட்டார்.  தென்னப்பிரிக்க இந்தியரின் போராட்ட சம்பந்தமாக இங்கு பல தலைவர்களையும், பத்திரிகை ஆசிரியர்களையும் சந்தித்தார்.  பின், கஸ்தூரிபாவும். இருகுழந்தைகளையும், சகோதரி மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு தென்னப்பிரிகாகவுக்குக் கப்பல் ஏறினார்.  குடும்பத்தோடு அவர் செய்த முதல் கப்பல் பிரயாணம் இதுதான்.

தென்னாப்பிரிக்க அரசாங்கம் காந்திஜி மீண்டும் அந்நாட்டுக்கு வருவதை விரும்பவில்லை.  அதனால் வெள்ளைக்கார இளைஞர்களால் காந்திஜி தாக்கப்பட்டார்.  வெளிநாட்டில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த கஸ்தூரிபாவுக்கு இந்த அனுபவம்.  அடியுண்ட காயங்களுடன் கணவரைக் கண்ட பதைத்துப் போனார் கஸ்தூர்பா.

தென்னப்பிரிக்காவில் காந்திஜி சத்தியக்கிரக இயக்கத்தைத் தொடங்கிய காலம் கஸ்தூர்பா நோய்வாய்ப்பட்டார் ஓயாத ரக்தப் பெருக்கு. 
ஆபரேஷன் செய்த பிறகு மிகவும் பலவீனமாக இருந்தார் கஸ்தூரிபா.   கஸ்தூரிபாவுக்கு மாட்டிறைச்சி சூப் கொடுக்கலாமா என்று டாக்டர் காந்திஜிக்குக் கடிதம் எழுதி கேட்கிறார்.  கஸ்தூர்பா வே அதை ஏற்றுக்கொள்ளவில்லை.  தான் இறந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுடன் இருந்தார் கஸ்தூர்பா.  மருத்துவமனûயிலிருந்த வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள் கஸ்தூர்பாயை.  உடம்பு குணமாக உப்பையும் மசாலாவையும் விடும்படி கஸ்தூர்பாவை வற்புறுத்துகிறார் காந்திஜி.  'டாக்டர் சொன்னா நீங்க விடுவீங்களா உப்பையும் மசாலாவையும்,' என்று எதிர்க்கேள்வி கேட்கிறார் கஸ்தூர்பா.  கஸ்தூர்பாவிடம் அன்பைக் காட்ட நல்ல சந்தர்ப்பம் என்று நினைக்கிறார் காந்திஜி. 'இன்று முதல் ஒரு வருஷ காலம் நான் உப்பு, மசாலாக்களைத் தொடமாட்டேன்.  நீ விட்டாலும் சரி, விடாவிட்டாலும் சரி,' என்கிறார் காந்திஜி.

உப்பையும் மசாலாவையும் நீக்கியதால் கஸ்தூரி விரைவில் நலமுற்றார். ரத்தப்போக்கு அறவே அகன்றுவிட்டது.  ஏற்கனவே üபாமர வைத்தியன்ý என்று பெயர் எடுத்தவர் காந்திஜி.  இந்த நிகழ்ச்சியால் அவருடைய புகழ் பரவியது.
இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது எனக்கு இது காந்திஜியைப் பற்றிய புத்தகமா கஸ்தூர்பாவைப் பற்றி புத்தகமா என்று சந்தேகம் வந்து விட்டது. ஆனால் இது கஸ்தூர்பாவைப் பற்றிய புத்தகம்தான்.  காந்திஜி எந்த அளவிற்குப் பிடிவாதமாக இருந்தாரோ அந்த அளவிற்கு கஸ்தூர்பா தன் உரிமைகளை விட்டுக்கொடுக்காமலிருந்தார்.  தனக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு என்ற பல நிலைகளில் உறுதி படுத்தியிருக்கிறார்.
காந்திஜி தாம் சிற்றின்ப வேட்கையை ஒடுக்க மிகவும் துன்பப்பட்டவர்.  கஸ்தூர்பாவுக்கோ அது மிகவும் எளிதாக இருந்தது.    இறுதியாக தென்னாப்பிரிக்க இந்தியரின் அறப்போர் வெற்றிகாமாக முடிந்தது.  அந்நாட்டு அரசாங்கம் இந்தியருக்கு நீதி வழங்க முன் வந்தது.

இந்தியா திரும்பியதும் சபர்மதி ஆசிரமத்தை நிறுவி காந்திஜியும் கஸ்தூரிபாயும் வசிக்கலானர். ஆசிரமத்தின் முதல் உறுப்பினர் கஸ்தூரிபா. அங்கு இருபத்தைந்து பேர்கள் இருந்தார்கள். எளிய முறையில் வாழ்ந்து சேவை செய்வதே அவர்கள் நோக்கம்.

ஆரம்பத்தில் ஹரிஜனங்களை ஆசிரமத்தில் சேர்க்க கஸ்தூர்பா உடன்படவில்லை.  ஆசிரமத்தின் லட்சியங்களில் ஹரிஜனங்களையும் சேர்ப்பது ஒன்று என்று காந்திஜி பிடிவாதமாக இருந்தார்   கஸ்தூர்பா இதற்கு உடன்படவில்லை என்ற போது மனம் வேதனைப் பட்டார். ஏழுநாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.  கஸ்தூர்பாவிற்குத்தான் இது தெரியும்.  தீண்டத்தகாதவர்கள் என்று மக்களுள் ஒரு பிரிவினர் ஒதுக்கி வைக்கப்பட்டு மனிதவுயிர்களுக்குள்ள எல்லா உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன என்பதை உணர்ந்து கஸ்தூர்பா மனம் மாறினார்.  மகாத்மா 1921இல் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார்.  1922ஆம் ஆண்டு அவர் கைதானார்.  அந்த வழக்கு பிரபலமான வழக்கு.  பல தலைவர்கள் சிறையில் இருந்தார்கள்.  அப்போது கஸ்தூர்பாதான் தலைமை ஏற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.

காந்தி அடிகள் வாழ்நாள் முழுவதும் ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டார்  1924ஆம் ஆண்டு தில்லியில் 21 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருந்தார்.  அன்னை கஸ்தூர்பா கலக்கம் அடைந்து விட்டார்.  காந்திஜிக்கு அவர் உயிர் பெரிதல்ல. ஆனால் அன்னைக்கு அந்த உயிர் பெரிதாயிற்றே.  மகாத்மா நாட்டுக்கு துன்பம் ஏற்றார்.  அன்னையோ நாட்டுக்காகவும் கணவருக்காகவும் துன்பங்களை ஏற்றார்.  எம் வி வெங்கட்ராமன் இந்தப் புத்தகத்தை சிறப்பாக எழுதியிருக்கிறார்.

பா தன் மகன் ஹீராலாலுக்குக் கடிதம் எழுதுகிறார்.  அவர் முகம்மதியராக மதம் மாறியபோது அதை ஏற்றுக்கொள்ளவில்லை பா. 
பையனிடம் இப்படி கடிதம் எழுதுகிறார்.  'நீ மதம் மாறியதை நான் விரும்பவில்லை.  ஆயினும் üநன்னேறி செல்லவே மதம் மாறினேன்,ý என்று நீ அறிவித்தபோது மதமாற்றங்கூட நல்லதுதான் என்று உள்ளுக்குள் மகிழ்ந்தேன்.' என்கிறார்.

ஹரீலால் மீண்டும் ஹிந்துவானார்.  தம் செய்கைகளுக்காக வருந்தினார்.  ஆனால் அவர் பெற்றோர்களிடம் வாழ விரும்பவில்லை.

'வெள்ளையனே வெளியேறு' என்ற கோஷத்துடன் மகாத்மா 1942ஆம் ஆண்டு தம் இறுதிப் போராட்டத்தைத் தொடங்கினார்.  பல தலைவர்களையும் மகாத்மாவையும் கைது செய்தார்கள்.  மகாத்மாவை காலையில் கைது செய்தார்கள்.  கஸ்தூர்பா மகாத்மாவுடன் பிர்லா மாளிகையில் தங்கியிருந்தார்.

அன்று மாலை சிவாஜி பார்க்கில் மகாத்மா ஒரு பெரும் கூட்டத்தில் பேசுவதாக இருந்தார்.  அவர் சிறைப்பட்டதால் அக் கூட்டத்தில் பா பேசுவதென்று முடிவு செய்தார்.  அவ்வாறே அறிவிக்கப்பட்டது.  இதை அறிந்து போலீஸ், பாவையும், பியாரிலாலையும் டாக்டா சுசீலா நாயரையும் கைது செய்தார்கள்.  மகாத்மா காந்தி பூனாவில் ஆகாகான் அண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.  அங்கு பாவையும் அழைத்துச் செல்லப்பட்டார். மகாத்மா காந்தியுடன் இருந்த மகாதேவ தேசாய் ஆகாகான் அரண்மனையில் உயிர் துறந்தார்.  சொந்த மைந்தரை இழந்ததுபோல் கதறினார் பா.

பா உடல்நிலையும் நாளுக்குநாள் நலிந்து வந்தது.  1945ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரே வாரத்தில் இரண்டு முறை அவருக்கு ஹிருதய நோய் வந்தது. டிசம்பர் மாதம் மறுபடியும் இரண்டு முறை குணமாகிவிட்டாலும் மிகவும் பலவீனமாகவே இருந்தார்.  அவர் வேண்டிக்கொண்டதற்கு இணங்கி பிள்ளைகளும் பேரர்களும் அவரைப் பார்க்க் அரசாங்கம் அனுமதி வழங்கியது.  1944  பிப்பரவரி 22ஆம் தேதி சிவராத்திரி புண்ணியதினம் 75ஆம் வயதில் உயிர் துறந்தார்.

அவர் உயிரோடு போராடியபோது பென்சிலின் என்ற மருந்தை அப்போதுதான் கண்டுபிடித்திருந்தார்கள்.  அதை போடலாமா வேண்டாமா என்ற குழப்பம் இருந்தது.  இறுதியில் பென்சிலின் ஊசி போடவில்லை. ஊசிப் போட்டிருந்தால் அவர் இன்னும் சில மணி நேரங்கள் உயிரோடு இருந்திருப்பார்.

இந்தப் புத்தகத்தைப் படிக்க படிக்க  உருக்கமாகவே இருந்தது.  பா என்ன விதமான தியாக வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்.  74 பக்கங்களுக்குள் ஒரு முழு வாழ்க்கைச் சரிதத்ததை எம் வி வெங்கட்ராம் கொடுத்துள்ளார். இதுமாதிரி வாழ்க்கைச் சரிதத்தை எழுதுவது அவ்வளவு சுலபமில்லை.  பல புத்தகங்களைப் படித்து சரியாக எழுத வேண்டும்.  அதை திறன்பட தந்திருக்கிறார் எம்.வி வெங்கட்ராம்.  



Wednesday, October 9, 2019

முப்பத்தைந்தாம் நாளின் வாசிப்பனுபவம் (06.10.2019)




அழகியசிங்கர்




ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து (20.10.2019) மூன்று நாட்கள் எதுவும் எழுத முடியாமல் போய்விட்டது.  இதோ இன்று (திங்கள்) மயிலாடுதுறை பயணம்.  கையில் பா.ராகவனின் 'மெல்லினம்' புத்தகம்.  இன்னும் சில புத்தகங்களையும் கொண்டு போயிருக்கிறேன்.  ஆனால் படிக்க முடியுமா என்று தெரியவில்லை.

நான் ஏற்கனவே ஆரம்பித்த 'மெல்லினம்' என்ற பா.ராகவனின் நாவலை ஒரு வழியாகப் படித்து முடித்துவிட்டேன்.  அதன்பின் இன்னொரு நாவலையும் எடுத்துப் படிக்க ஆரம்பித்து விட்டேன்.  கையில் ஒரு நோட்டு எடுத்துக்கொண்டு போனேன். ராகவன் நாவலைப் பற்றி எழுதத் தொடங்கினேன்.

'மெல்லினம்'  என்ற நாவல் 'கல்கி' பத்திரிகையில் தொடர்கதையாக வந்தது.  இந் நாவலைப் படிக்கும்போது கல்கி வாசகர்களுக்காக எழுதப்பட்ட நாவல் போல் தோன்றவில்லை.  நாவல் சொல்லும் முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்.   சிறுவர்களை மையமாக வைத்துக்கொண்டு ஒரு நாவலை எழுதி விட்டார்.  ஒரு விதத்தில் இது சிறார்களின் நாவலா என்பதை ஏற்க முடியவில்லை.  நாவலை எப்படி வேண்டுமானாலும் கட்டமைத்துக் கொள்ளலாம் என்பதற்கு இந்த நாவல் ஒரு உதாரணம். 

நாவலில் ஜக்குவும், குட்டியும் அறிமுகமாகிற விதமே சிறப்பாக இருக்கிறது. ஜக்கு மூலம் பட்டாம்பூச்சியை அறிமுகப்படுத்துகிறார். அறிமுகப்படுத்துகிற விதமே சிறப்பாக இருக்கிறது.  

ஜக்கு பட்டாம்பூச்சியைப் பிடித்து அதைக் கொஞ்சிவிடடு திரும்பவும் பறக்கவிடுவான்.  அவனுடைய அரவணைப்பில் பட்டாம் பூச்சி மயங்கி இருக்கும்.  நாய், பூனையுடன் விளையாடிக்கொண்டிருக்கும்.  ஜக்கு எப்படிப் படிப்பில் கெட்டிக்காரனாக இருக்கிறான் என்ற சந்தேகம் குட்டிக்கு.

குட்டியிடம் ஜக்கு சொல்கிறான் : 'பாடம் படிக்கிறது மட்டும் போதாது குட்டி.  பலதும் கத்துக்கணும்.  அப்பத்தான் சயின்டிஸ்டாக பொயட்டாக இன்னும் என்னென்னவாக நினைக்கிறோமோ அதெல்லாம் முடியும்,' என்கிறான். 

ஆறாம் வகுப்புப் படிக்கும் ஜக்குவும், நான்காம் வகுப்பு படிக்கும் ககுட்டியும் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். ஜக்குவின் அப்பா - அம்மாவின் அறிமுகம் நடக்கிறது.  ஜக்கு அப்பா குமார் குற்றச் செய்தியாளனாகச் சேர்ந்து ஆறு வருடங்கள் ஆகியிருந்தன.  அவனுடைய மனைவி அழகு சாதன நிறுவனத்தில் கணக்காளராக இருக்கிறாள். 

குட்டி ஜகனைப் பார்த்துக் கேட்கிறாள் : 'நீ எதிர்காலத்துல என்னவாக ஆக விரும்புகிறாய்?'

ஜக்கு சொல்கிறான்.  'நான் ஒரு பட்டாம்பூச்சியாக விரும்புகிறேன்.'

ஜக்கு பட்டாம்பூச்சியுடன் பேசுகிறான்,  ஒரு நாயை வளர்க்கிறான்.  அதற்கு வெங்கடாஜலபதி என்று பெயர்.  மகாபலிபுரம் போய்விட்டு வந்தபின் ஒரு குரங்குடன் அவனுக்கு சகவாசம் உண்டாகிறது.  அவனுடன் குரங்கு பேசுவதுபோல் வருகிறது.  இதெல்லாம் நிஜமா? கற்பனைதான்.  கற்பனையை அப்படி எழுதுகிறார்.  இதெல்லாம் சாத்தியமா? சாத்தியமில்லைதான்.  ஆனால் இதை என்ன சொல்வது? மேஜிக்கல் ரியலிஸம் என்று குறிப்பிடலாமா? அந்தத் தியரியை ராகவன் நாவலில் கொண்டு வருகிறாரா?  ஆனால் ஒரு பிரபல பத்திரிகையில் தொடர்கதையாக இதைக் கொண்டு வருகிறார்.  பெரிய முன்னேற்றம்.  இயல்பான கதை கிடையாது. துணிச்சலான முயற்சி.

ஜக்கு சராசரியாக இருக்கக் கூடாது என்று கதாசரியர் நினைக்கிறார்.  ஒரு இடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.  

'சராசரிகளின் அந்தரங்கம் அநேகமாக ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். இடங்களும் பெயர்களும் சம்பவங்களும் மாறினாலும் உணர்ச்சிகள் ஒரேதரம்தான்.'

அப்பாவின் பழைய டைரிகளை எடுத்து எதாவது காலிப்பக்கங்கள் இருக்குமா என்று தேடுகிறான்.  அந்த டைரியில் அப்பா எழுதி வைத்ததைப் படிக்கிகாற்ன.  

 கல்யாணத்திற்கு முன்னால்  அப்பாவிற்கு ஒரு காதலி இருக்கிறாள். அவள் பெயர் நிர்மலா. டைரி மூலம் இதைத் தெரிந்து கொண்டு விடுகிறான். அன்றிலிருந்து அவன் நிம்மதி இல்லாமல் தவிக்கிறான்.  படிப்பில் கவனம் இல்லாமல் போகிறது.  வகுப்பில் வந்தால் கூட வெறித்து எங்கோ பார்த்துக்கொண்டிருக்கிறான். குட்டியோடு அவன் சரியாகப் பேசவில்லை. அவன் பள்ளிக்கூடத்தில் காதலைப் பற்றி ஏற்கனவே அவனுக்கு ஒரு அனுபவம் இருக்கிறது.  காதலை நோய்க் கிருமியாகப் பார்க்கிறான். அப்பாவின் டைரியில் வரும் காதலை அவன் படிக்கும்போது இப்படி நினைக்கிறான். 'வரிகளில் நிறைந்திருந்த எழுத்துகளிலிருந்து கிருமிகள் எழும்பி வந்து அவனது கண்கள் வழியே ஊடுருவி நேரே அவனது மூளையைத் தாக்கியது..'

அப்பா காதலித்த நிர்மலா அதிகப் பணம் சம்பாதிக்க அமெரிக்கா செல்ல நினைக்கிறாள்.  ஜக்கு அப்பா குமார் இதற்கு சம்மதிக்கவில்லை.  தன்னுடைய அப்பா அம்மாவை தனியாக விட்டுவிட்டு வரப்பிடிக்கவில்லை. காதல் முறிந்து விடுகிறது.  நிர்மலா அமெரிக்கா போய்விட்டாள்.  

இந்த நாவலில் ஒரு இடத்தில் பெயர் குழப்பம் இருக்கிறது.  குட்டியோடு அம்மா பெயர் காஞ்சனா.  நிர்மலா என்ற பெயரி ஜெகன் அப்பா குமாரின் காதலியின் பெயர்.  நிர்மலா குட்டியின் அம்மா பெயராக் ஒரு இடத்தில் தவறுதலாகக் குறிப்பிடப்படுகிறது. எப்படி பா.ராகவன் இந்தத் தவறை தெரியாமல் விட்டுவிட்டார்?

குட்டியிடம் ஜகன் நிறையா பொய் சொல்கிறான்.  அப்பா டைரியில் எழுதிய கனவை தான் கண்டதாக சொல்கிறான்.  பின் வயலட் புடவைக் கட்டிய மேட்டுத் தெரு பொல்லாத ஆவி ஒன்று இரவு தன் அப்பாவை பயமுறுத்துகிறது என்கிறான்.  யாரிடமும் சொல்லாதே என்று குட்டியை மிரட்டுகிறான். குட்டி கேட்கிறாள்.  ஏன் அந்த ஆவி உன் அப்பாவை மட்டும் பயமுறுத்த வேண்டும் என்று.  அதற்கு ஒரு கதை சொல்கிறான்.  

குட்டி ஜகன் சொன்னதையே கற்பனை செய்து ரத்தக்காட்டேரி என்று ரஞ்சனா என்ற வகுப்புத் தோழியிடம் சொல்கிறாள். ரஞ்சனா அவள் அம்மாவிடம் சொல்ல குட்டி அம்மாவுடன் ரஞ்சனா அம்மா சண்டைக்கு வந்து விடுவாள் போல் தோன்றுகிறது.  சின்னவர்கள் பேசிக்கொள்வது பெரியவர்கள் சண்டையாகப் போய்விடும்போலிருக்கிறது. 

ஜக்கு இரண்டாவது டூரில் தனியாக பள்ளிக்கூட ஆசிரியார்கள் மாணவர்களோடு போகிறான்.  மூன்று நாள்.  அவன் ஒருநாள் காணாமல் போய்விடுகிறான்.  வேண்டுமென்றே.  அவன் அப்பாவை இறுதியில் பார்க்கும்போது அவன் குழப்பமெல்லாம் தீர்ந்து விடுகிறது. 

இந்தக் கதையல் ஒன்று புரியவில்லை.  ஆரம்பத்தில் குட்டி நாலாங்க்ளாஸ் படிப்பதாகவும், ஜகன் ஆறாம் வகுப்புப் படிப்பதாகவும் நாவலாசிரியர் எழுதியிருக்கிறார்.  இங்கேதான் லாஜிக் உதைக்கிறது.  ஜகன் எட்டாம் க்ளாஸ் படிக்கிறவனாகவும் குட்டி ஆறாம் க்ளாஸ் படிக்கறவளாகவும் விவரித்தால் சரியாக இருக்கும்போல் தோன்றுகிறது. காதல் என்கிற விஷயம் சிறுவர்களிடம் எப்படிப் புகுந்து போகிறது என்பதை விவரிப்பதுதான் இந்த நாவல். 

இந்த நாவல் 2004 ஆம் ஆண்டு கிழக்குப் பதிப்பகதில் வந்துள்ளது.  அப்போது விலை ரூ.70.




Tuesday, October 8, 2019

முப்பத்துநான்காம் நாளின் வாசிப்பனுபவம் (05.10.2019)



அழகியசிங்கர்





சுப்ரமண்ய ராஜ÷ கதைகள் என்ற தொகுப்பை எடுத்து வைத்துக்கொண்டேன்.  32 கதைகள் கொண்ட இத் தொகுப்பில் இரண்டு குறுநாவல்கள். 'இன்று நிஜம்,'  'இரவுகள் தவறுகள்.' 

ஒரு பத்து கதைகளைப் படித்தேன்.  இந்தப் புத்தகத்தையும் முழுதாக முடிக்காமல் இன்னும் படிப்பதற்குப் பாக்கி வைத்துள்ளேன். இலக்கியச் சிந்தனை கூட்டங்களில் சுப்ரமண்ய ராஜ÷, பாலகுமாரனை பார்த்திருக்கிறேன். சுப்ரமண்ய ராஜ÷ ஒரு மோட்டர் பைக்கில் கம்பீரமாக வந்து இறங்குவார். அப்போது இலக்கியச் சிந்தனைக் கூட்டம் ஆழ்வார்பேட்டையில் ஒரு சர்ச் இருக்கும் இடத்தில் நடக்கும் என்று நினைக்கிறேன்.

இலக்கியச் சிந்தனை கூட்டங்களை சுப்ரமண்ய ராஜ÷வும், பாலகுமாரனும் கலகலப்பாக பேசிக்கொண்டிருப்பார்கள். அசோகமித்திரன் சுப்ரமண்யராஜ÷ கதைகளைக் குறித்து இப்படிக் குறிப்பிடுகிறார். 'முன்மாதிரி என்று யாரையும் குறிப்பிடத் தோன்றவில்லை.  அவருடைய எழுத்தில் சமகாலத்துச் சமூக, தனி மனித ஒழுக்கச் சிக்கல்களும், மனசாட்சி நெருக்கடிகளும் சமகாலத் தமிழ் நடையில் வடிவம் தரப்பட்டிருக்கின்றன.  ஆனால் இந்தச் சிக்கல்களையும் இந்த நெருக்கடிகளையும் இவர்தான் எழுதியிருக்க முடியும் என்று தோன்றுகிறது,'  என்று எழுதியிருக்கிறார்.  ஏன் என்று தெரியவில்லை எனக்கு சுப்ரமண்ய ராஜ÷ கதைகளைப் படிக்கும்போது இன்னொரு எழுத்தாளரான ஆதவன் ஞாபகம் வருகிறது. எதிர்பாராதவிதமாய் இரு எழுத்தாளர்களுக்கும் ஏற்பட்ட விபத்துக்கள் இந்த எழுத்தாளர்களுடைய கதைகளைப் படிக்கும்போது தோன்றுகிறது.  ஆனால் ஆதவன் அதிகமாக எழுதியிருக்கிறார்.  சுப்ரமண்ய ராஜ÷ இரண்டு குறுநாவல்களுடன் 30 கதைகளுடன் நிறுத்தி விட்டார். 

'நினைவாக' என்ற தலைப்பில் தேவகோட்டை வா மூர்த்தி எழுதியிருக்கும் நினைவுக் குறிப்புகள் உருக்கத்தின் உச்சம் என்று எனக்குத் தோன்றுகிறது.  
இப்படி ஆரம்பிக்கிறார் மூர்த்தி. üஇன்று நிஜம்ý சிறுகதைத் தொகுதி வெளியானது.  'முதல் பிரதி மூர்த்திக்கு' என்று எழுதிக் கையெழுத்திட்டு எனக்குத் தந்தான்.  'மோனை நயம் கருதியா' என்று கேட்டேன். 'இல்லை. மூர்த்தியின் நயம் கருதி' என்று புன்னகை செய்தான்.  அந்தப் புன்னகைதான சுப்ரமண்ய ராஜ÷. அந்தப் புன்னகைதான் சுப்ரமண்ய ராஜ÷, என்று குறிப்பிடுகிறார் மூர்த்தி. 

இப்படி சுப்ரமண்ய ராஜ÷வை அறிமுகப்படுத்திக் கொண்டு ++ போகிற விஷயம் இந்தப் புத்தகத்தை மேலும் மெருகூட்டுகிறது.  நெகிழ வைக்கிறது. 
பொதுவாக எழுத்தாளர்களுக்கு உதவக் கூடியவர் சுப்ரமண்ய ராஜ÷.  இந்தப் புத்தகத்தில் 07.01.85ல் கல்யாண்ஜி தேவ கோட்டை வா மூர்த்திக்கு ராஜøவைப் பற்றி எழுதிய கடிதத்தை இங்கே குறிப்பிடுகிறார்.

'ராஜ÷வைக் கேட்டதாகச் சொல்லுங்கள்.  சுப்ரமண்யராஜ÷ சென்னையின் சாயலே இல்லாத நல்ல மனுஷன்.  மே அல்லது ஜøன் இலக்கியச் சிந்தனையில் பார்க்கும்போது, üஎன்ன ராஜ÷ ஆளே மாறிப் போயிட்டீங்க?ý என்றேன்.  üவயசு ஆயிட்டுதில்லியா சுவாமி,ý என்றார்.  மனம் அப்படியேதான் இருக்கிறது.  69-70ல் கோடம்பாக்கம் வெள்ளாளர் தெருவிலிருந்து லிபர்டி வரை - அப்போது சிறுமழை பெய்தது - என்னைக் கூட்டிக்கொண்டு போன, அப்புறம் ஆதம்பாக்கத்திலிருந்து சைக்கிளைத் தள்ளிக்கொண்டே பழவந்தாங்கல் பிரிகிற பாதைவரை பேசிக்கொண்டு அதிக நேரம் எனக்காக ஒரு காலையை ஒதுக்கின அதே முகம் இந்தப் பதினாறு வருஷத்திலும் இருக்கிறது.  ராஜ÷, நான் சென்னையில் இருந்திருந்தால், எனக்கு இணக்கமான ஒரு சிநேகிதராக நிச்சயம் இருந்திருப்பார்.  இப்போது மட்டுமென்ன சிநேகிதர்தான்.' என்று உருகி எழுதியிருக்கிறார் கல்யாண்ஜி.

தான் உபயோகிக்கத் தொடங்கியிருந்த ஒரு விலையுயர்ந்த பேனாவை ராஜ÷வுக்குத் தந்தார் பிரபஞ்சன், இந்தப் பேனாவுக்கு ராஜ÷தான் தகுதி என்பதுபோல.üபிரபஞ்சன் கொடுத்த பேனாý என்று ராஜ÷ ஓரிருமுறைக்கு மேலேயே மூரத்தியிடம் சொல்வாராம். ýஓர் எழுத்தாளன் தன் பேனாவை இன்னொரு எழுத்தாளனுக்கு அளிப்பது சாதாரண விஷயமில்லை மூர்த்தி,ý என்பாராம் ராஜ÷.

இந்தக் கட்டுரையில் ஜே.கே பற்றி ராஜ÷ சொன்னது முக்கியமாக எனக்குப் படுகிறது. ஜே.கிருஷ்ணமூர்த்தி உரையாடல் ஒன்றில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை ராஜ÷ விவரிகிறார்.  ஆண்டுக்கொரு முறை டிசம்பர் மாலைகளில் ஜே.கேயின் கூட்டத்தொடர் ஒன்று சென்னையில் நடக்கும். அந்த உரையாடல்கள் ஒன்றில் "யாருமே சிந்தித்துச் செயலாற்றுவதில்லை. வாழ்க்கையில் எல்லா நேரங்களுமே பழக்கத்தின் பாதையிலேயே செல்கின்றன.." என்று ஜே.கே கூற, ராஜ÷ எழுந்து, "இந்தக் கூட்டத்திற்கு நான் வந்தது எந்தப் பழக்கத்தின் அடிப்படையிலும் இல்லை.  மிகவும் தீர்மானித்து நான் செய்தது நான் இங்கு வந்தது.  இதற்கு என்ன ஸôர் உங்கள் பதில்?"  என்று கேட்டிருக்கிறார்.  அதற்கு ஜே.கே, 'நீங்கள் கேள்வி கேட்கும் பழக்கத்தில் இருக்கிறீர்கள் ஸôர்,' என்று ஜே.கே பதிலளித்தாராம்.  கூட்டம் மொத்தமும் சிரித்ததாம்.  இதை மூர்த்தியிடம் கூறிய ராஜ÷ 'ஜே.கே என் கேள்விக்குப் பதில் தந்தாரா மூர்த்தி?' என்று கேட்கிறார் மூர்த்தியிடம். 

ராஜ÷வின் கதைகள் பொதுவாகக் கொஞ்சப்  பக்கங்களுக்குள் முடிந்து விடுகின்றன. இரண்டு குறுநாவல்கள் தவிர.  ஒவ்வொரு கதையையும் படிக்கத் தொடங்கினால் கீழே வைக்கத் தோன்றாது.  வாசகன் ஊகிக்க முடியாத முடிவுகளைக் கதைகளில் கொண்டு வருகிறார். üமீண்டும் ஓர் ஆரம்பம்,ý என்ற முதல் கதையை எடுத்துக்கொண்டால், எதிர்பாராத நிகழ்ச்சிதான் இந்தக் கதையில் முக்கியமாகத் தோன்றுகிறது. ரமணி என்பவர் ஒரு ஓட்டலில் பணிபுரிகிறார்.  ஓட்டல் முதலாளிக்கு விசுவாசமாக இருக்கிறார்.  எப்போதும் ரமணியின் தயவு அவர் முதலாளிக்கு தேவைப் படுகிறது.  அதனால் அவர் வீட்டிலேயே ஒரு அறையை ஒதுக்கித் தங்க வைக்கிறார்.  24மணி நேரமும் பணிபுரிந்து கொண்டிருக்கும் வேலை.  அந்த வேலையைத் தொடர்ந்தால ரமணியின் லட்சியம் நிறைவேறாமல் போய்விடும்.  

சுவாமிநாதனுக்கு ஒரு சோகம் உண்டு.  அவர் அவருடைய மனைவியையும், பத்து வயது பையனையும் விட்டுவிட்டு தனியாக கோபித்துக்கொண்டு வந்து விடுகிறார்.  பின் தன் வாழ்க்கையில் முன்னேறி ஒரு ஓட்டலுக்கு அதிபதியாக இருக்கிறார்.  உடல் சரியில்லை என்பதால் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்.  ரமணியை சிதம்பரத்தில் உள்ள தன் மனைவியையும் பிள்ளையும் பார்த்து அவர்களை அழைத்துக்கொண்டு வர ஏவுகிறார். ஆனால் அவர் மனைவி வர விரும்பவில்லை.  அவர் பையனும். இங்கு ரமணிக்கும் அவர் பையனுக்கும் நடக்கும் உரையாடலில்தான் கதையின் மொத்த திருப்பமும் ஏற்படுகிறது.  திறமையாக எழுதப்பட்ட கதை
இரண்டாவது கதை üஇருட்டில் நின்றý என்ற கதை.   கதை ஆரம்பிக்கும்போது ரயில் நின்று விட்டது என்று ஆரம்பிக்கிறது. ஒரு விபத்து. கணேசன் ரயிலை விட்டு இறங்குகிறான்.  எல்லோரும் கூட்டம் கூட்டமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  நிகழ்காலம் எதிரகாலம்தான் இந்தக் கதை. பலவாறு யோசனை செய்து கொண்டே இருக்கிறான்.  கடைசியில் வண்டி புறப்படும்போது எல்லோரும் ரயிலில் ஏறி விடுகிறார்கள்.  வண்டியும் புறப்படுகிறது.  ஆனால் இவன் வண்டியில் ஏற எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை.

மூன்றாவது கதையான கேள்விகள் என்ற கதையில் கைலாசம் என்பவனிடமிருந்து ஒரு மொட்டைக் கடிதாசு வருகிறது.  தன் மனைவியைப் பற்றி. அவள் கற்பை சந்தேகப்படும்படியாக.  வெளியில் தன் பதட்டத்தைக் காட்டாமல் இதை ஆராய மதுரைப்போய் கைலாசத்தைப் பார்க்க நினைக்கிறான்  ஒரு லாட்ஜில் தங்குகிறான்.  மொட்டைக் கடுதாசி எழுதியவன் அந்த ஓட்டலுக்கு அடிக்கடி வருவான் என்ற கேள்விப்படுகிறான். அந்த ஓட்டலில் விபச்சாரம் நடக்கிறது. ஒரு பெண்ணுடன் இரவை கழிக்கிறான்.  அவன் மனது மாறி விடுகிறது.  கைலாசம் என்பவனைச் சந்திக்காமல் அந்த இடத்தைக் காலி செய்துகொண்டு போய்விடுகிறான். ஒன்றும் வெளிப்படையாக சொல்லாமல் மனதிலிருந்து உருவாகி மனதிலேயே முடிந்து விடுகிற கதை.  அதிர்ச்சியான விஷயத்தை எப்படி எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்ற இக் கதை புகட்டுகிறது.

இன்னொரு கனவு என்ற கதையில் முன்னதாக நடக்கப் போகிறதைக் கனவுமூலம் ஒருவன் டாக்டரிடம் வெளிப்படுத்துகிறான். கடைசியில் டாக்டரை சந்திப்பதையே கனவாக வருகிறது என்று கொல்கிறான். டாக்டருடன் பேசிக்கொண்டிருக்கும்போது டாக்டரை கத்தியால் குத்துவதுபோல் கனவில் வருகிறது.  

முகமெல்லாம் வியர்க்க, மூர்த்தி திடீரென்று விழித்துக்கொண்டான்.  அதுவே ஒரு கனவுதான்.  நேரே அவன் டாக்டரைப் பார்க்கவில்லை. 
வண்டியில் பெற்றோல் தீர்ந்துபோய் தள்ளிக்கொண்டு போகும்போது வரப்பில் ஒரு பெண்ணைப் பார்த்துச் சபலப்படும் கதை. உண்மையில் கற்பனையில் சபலப்பட்டு முடிந்து விடுகிற கதை.  

கைலாசம்னு ஒருத்தர என்ற கதையில் வாரம் ஒருமுறை கடன் வாங்குவதற்கென்று சுவாமிநாதனைப் பார்க்க வீட்டிற்கு வருவான்.  அவன் கேட்கிற பணத்தை சுவாமிநாதன் கொடுப்பான். அவன் மனைவிக்கு இது பிடிக்கவில்லை.  ஒருமுறை அவன் இல்லாதபோது அவன் வருகிறான்.  பின் அவனைத் திட்டி அனுப்பி விடுகிறாள்.  சுவாமிநாதன் இதைத் தெரிந்துகொண்டு மனைவியைத் திட்டுகிறான்.  பணம் இல்லாதபோது படிக்கும்போது கைலாசம் எப்படி உதவி செய்தான் என்பதைக் குறிப்பிடுகிறான். கைலாசத்தை நேரில் பார்க்கப் போகிற சுவாமிநாதனுக்கு அவன் குடித்துவிட்டு கெட்டழிகிற போக்ûப் பார்த்து அவனைப் பார்க்காமலேயே வந்துவிடுகிôன்.  பத்து நான் வராதவன் அவன் வீட்டில் இல்லாதபோது கைலாசம் வருகிறான்.  அவன் மீது இரக்கப்பட்டு சுவாமிநாதன் மனைவி அவனுக்குப் பணம் கொடுத்தனுப்புகிறாள்.  

இப்படியே போகிறது சுப்ரமண்ய ராஜ÷வின் கதைகள்.  அடிக்கடி கதா மாந்தர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள்.  தண்ணீ அடிக்கிறார்கள்.  பரர்க்கிற பெண்களுடன் விபரீத சகவாசம் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.  சுலபமான நடையில் விதம் விதமாய் கதை எழுதிக்கொண்டு போகிறார்.  மேலும் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுகிறது.

பத்து கதைகளை படிக்கும்போது கதைகளில் தன்னை மையப்படுத்தி கதைகள் எழுதிக்கொண்டு போகிறார்.  ஆனால் விதம்விதமாக கதைகளைக் கூறுகிறார்.  படிப்பதற்கு அலுப்பே ஏற்படுத்தவில்லை. 39 வயதுக்குள் சாதனை செய்திருக்கிறார் சுப்ரமணிய ராஜø. 

சுப்ரமண்ய ராஜøவின் முழுத் தொகுப்பை கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  அதேபோல் ஆதவன் கதைகளையும்.  ஒருவர் இந்த இரண்டு தொகுப்புகளையும் வாங்கிப்படிப்பது அவசியம்.