Thursday, September 12, 2019

பத்தாம் நாளின் வாசிப்பனுபவம் (11.09.2019)





அழகியசிங்கர்





522 பக்கங்கள் கொண்ட திரௌபதியின் கதையைப் படித்துக்கொண்டு வருகிறேன். ஒரிய மொழியில் பிரதிபாராய் எழுதி ஆங்கிலத்தில் பிரதீப் பட்டாச்சார்யா மொழி பெயர்த்து ஆங்கிலத்திலிருந்து தமிழில் இரா பாலச்சந்திரன் மொழி பெயர்த்திருக்கிறார்.
அவ்வளவு சுலபமாய் இந்த நாவலைப் படித்து விட முடியாது.  எவ்வளவு நாட்கள் ஆகுமென்று தெரியாது. இதைத் தவிர குறைந்த பக்கங்கள் கொண்ட புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.  தினமும் எதாவது எழுத நினைக்கிறேன்.  
மற்றவர்களும் இந்தப் பகுதியில் தங்களுக்குத் தோன்றுவதை எழுதலாம்.  நான் இருக்கும் குடியிருப்பில் நான் மட்டும்தான் படித்துக்கொண்டிருக்கிறேன்.  எங்கள் அடுக்கத்தில் 6 குடும்பங்கள் இருக்கின்றன.  20 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.  யாரும் புத்தகம் என்ற ஒன்றைத் தொடுவதில்லை.  அதுவும் தமிழ்ப் புத்தகம் என்றால் காத தூரம் ஓடுவார்கள்.
அதேபோல் புத்தகம் என்று எதை எடுத்துப் படிப்பது என்று தடுமாறிக்கொண்டிருக்கிறேன்.  புத்தகங்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது.  நான் படித்துக்கொண்டு போவதைப் பார்த்து பேத்தி கேட்கிறாள்.   üüஎன்ன தாத்தா நீ படித்துக்கொண்டே இருப்பியா?ýý என்று.  எனக்கு திகைப்பாக இருக்கிறது.  உண்மையில் நான் படிக்கிறது படிப்பே இல்லை.  பெரும்பாலான நேரத்தை நான் வீணடித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.  பேத்தியின் கேள்வி என்னுள் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது.
நான் 11ஆம் தேதிக்கு ஓஷோவின் ஞானக் கதைகள் எடுத்துப் படித்துக்கொண்டிருக்கிறேன்.  128 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.
34 கதைகள் கொண்ட ஞானக்கதைகள் இவை.  ஒவ்வொரு கதையில் கடைசியில் ஓஷோவின் குறிப்புகள் வருகின்றன.  புத்தரைப் பற்றியும் பல அறிஞர்களின் கதைகளைப் படிக்கும்போது பரவசமான உணர்வு ஏற்படுகிறது.  எல்லாக் கதைகளும் அரைப்பக்கம், கால்பக்கம், முக்கால் பக்கம்தான் ஆனால் அதன் முலம் தெரிய வருகிற நீதி நம்மை யோசிக்க வைக்கிறது.
34வது கதையைச் (கடைசிக்கதை) சற்று பார்ப்போம்.  இரண்டு சிறுவர்கள் வீட்டைவிட்டு ஓடிப்போவதைப் பற்றி தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.  
"இது தங்களுடைய அப்பாவிற்கு தெரியவந்தால் உதைப்பார்களே?" என்கிறான் ஒரு பையன்.
"அதனாலென்ன அவர்களைத் திருப்பி அடித்தால் போயிற்று," என்கிறான் இன்னொருவன்.
அதற்கு முதல் பையன் குறிப்பிடுகிறான்.  "நாம் அவ்வாறு செய்ய முடியாது.  ஏனெனில் தாயையும் தந்தையையும் மதிக்க வேண்டுமென்று வேதாகமம் நமக்குப் போதிக்கிறது அல்லவா?" என்கிறான்.
இங்கு கதையில் ஒரு டுவிஸ்ட்.  "சரி அப்படியானால் ஒன்று செய்வோம்.  நீ என்னுடைய அப்பாவை அடி.  நான் உன்னுடைய அப்பாவை அடிக்கிறேன்."
இந்த டுவிஸ்ட்டை எதிர்பார்க்கவில்லை.  இதற்கு ஓஷோ என்ன குறிப்பிடுகிறாரென்றால், "கள்ளம் கபடமற்ற தன்மை என்பது புரியாத புதிர் போன்றது.  அது வாழ்க்கையின் ரகசியங்களின் எல்லாக் கதவுகளையும் திறக்கிறது," என்கிறார்.
இதுமாதிரி இப்புத்தகத்தில் 34 கதைகள் இருக்கின்றன.  திரும்பத் திரும்ப படிக்க வேண்டிய புத்தகமாகத்தான் எனக்குப் படுகிறது. 

2 comments:

  1. கிரேஸி கிரியேஷன்ஸ் நாடகக் குழு ஆரம்பிச்சு இருபது வருஷமாச்சு! இந்தியாவின் பல
    இடங்களில் நாடகம் போட்டார்கள். பக்கத்திலிருக்கும் நாடுகளிலும் நாடகம் அரங்கேறி சக்கை
    போடு போட்டது. என்றாலும் ஒரு சில விஷமிகள்
    “என்ன இருபது வருஷமா நாடகம் போடற? இன்னும் அமெரிக்காவுக்கு போகல போல இருக்கு?”
    என்று கிரேஸி மோகன் சாரிடம் எக்குத் தப்பாக கேட்டு கடுப்பேறினார்கள்.
    வேறு வழியில்லாமல், எச்சுமிப் பாட்டியின் வீட்டைத் தேடி தலை தெறிக்க ஓடுகிறார். பாட்டியின்
    காலில் விழுந்து விடுகிறார். எச்சுமிப் பாட்டி சாதாரணப் பாட்டி அல்ல. அவர் என்ன
    சொன்னாலும் பலிக்கும். “அமெரிக்கா பிராப்திரஸ்து” என்று பாட்டி ஆசிர்வதிக்கிறாள்.
    அப்பொழுது எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்து விடுகிறது. ஈஜிப்த் நாட்டின் மம்மி போல்
    சவமாகி உறங்கிக் கொண்டிருந்த பாட்டியின் பேரனான கிச்சா, (கிரேஸி மோகன் சார் பாட்டியின்
    காலில் விழுந்த அதே கணத்தில்) நேரே பாட்டியின் காலில் தற்செயலாக உருண்டு விழுந்து
    விடுகிறான். அந்த ஆசிர்வாதம் கிச்சாவுக்கும் பலித்து விடுகிறது. கிச்சாவை அமெரிக்காவுக்கு
    கூட்டிக் கொண்டு போக மோகன் சாருக்கு கொஞ்சமும் விருப்பமில்லை.
    காரணம் கிச்சாவின் ஒரு அராத்து! கிச்சா தன்னை எப்பொழுதும் ‘திருவல்லிக் கேணி
    ஷேக்ஸ்பியர்’ என்றுதான் நினைத்துக் கொள்வான். அவன் செய்வதெல்லாம் அபத்தமாக
    இருக்கும். ஒரு தடவை “தந்தியில் வதந்தி “ என்கிற நாடகம் போட்டார்கள். அதில் வரும் உப்பிலி
    கதாபாத்திரத்திற்கு கிச்சா தந்தி கொண்டு போய் கொடுக்க வேண்டும். உப்பிலியின் முகம் குரங்கு
    மாதிரி இருக்கும். கிச்சா, “சார் தந்தி” என்று சொல்வதற்கு பதிலாக மறந்து போய் “சார்! மந்தி!
    என்று சொல்லிவிட்டான். அதிர்ச்சி அடைந்த பார்வையாளர்கள். கையில் கிடைத்ததை எல்லாம்
    எடுத்து அடித்தார்கள். இன்னொரு தடவை திருவல்லிக்கேணி ப்ரெண்ஸ் பைன் ஆர்ட்ஸில் “பிடி
    சாபம்” என்று நாடகம் போட்டார்கள். ரிஷியாக நடிக்க வேண்டியவர் திடீரென்று ரிஷிகேஷம்
    கிளம்பிவிட்டதால், நமது கிச்சா அந்த பாத்திரத்தை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வஜ்ர
    கோந்து போட்டு நீண்ட தாடி ஓட்டப் பட்டிருந்தது. அவன் தாடையை அது இறுக்கப் பற்றி
    இழுத்து செய்த சித்ரவதையால் பிடி சாபம் என்பதை “பிதி சாதம்” “ “பிதி சாதம்” என்று வசனத்தை
    கண்றாவியாக உச்சரித்து மானத்தை வாங்கினான். கடைசியில் தாடியைப் பிய்த்து, பிரம்மாவாக
    வேஷம் போட்டவரின் கைகளில் திணித்து விட்டு மேடையில் இருந்து ‘அம்பேல்’ ஆகிவிட்டான்.
    இவனை அமெரிக்காவிற்கு கொண்டு போனால் மானம் கப்பல் (ஸாரி ப்ளேன்!) ஏறிவிடும் என்கிற
    ஒரே காரணத்திற்காகத்தான் பாட்டியிடம் கிச்சா வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப்
    பார்த்தார். ஆனால் எச்சுமிப் பாட்டியோ “என் பேரனை நீ கூட்டிட்டுப் போகலைன்னா
    அமெரிக்கா பிரயாணம் டிராப்திரஸ்து” என்று ஒரே அடியாகச் சொல்லிவிடுகிறாள். வேறு வழி
    தெரியவில்லை. பாட்டி சொன்னா பலிச்சுடுமே! சரி போனாப் போறதுன்னு இந்த ‘அச்சு பிச்சு’
    வர்றதுக்கு ஓகே சொல்லிவிடுகிறார்.

    ReplyDelete
  2. சார், என்னோட விமர்சனம் நீளமாயிட்டதால உங்க ப்ளாக் ஸ்பாட்டுல எல்லாத்தையும் பப்ளிஸ் பண்ண முடியல. திரும்ப கரெக்ட் பண்ணவும் முடியல. சாரி சார்

    ReplyDelete