Monday, October 21, 2019

நாள் 50 - அக்.21 - திங்கள்

திங்கள் வாசிப்பை இங்கே பதிவிடவும்.

1 comment:

  1. சென்ற வாரம் முழுவதும் வாசித்த புத்தகத்தின் பெயர் ‘மகரயாழ் மங்கை’ எழுதியவர் திரு. ஜெகசிற்பியன் அவர்கள். மொத்த பக்கங்கள் 464!

    பல்லவப் பேரரசன் ராஜசிம்மன் கைலாச நாதர் கோவில் கட்ட விரும்புகிறான். சாளுக்கிய மன்னன் விநயாதித்தன் சூழ்ச்சியால் அவனைக் கொல்ல சதி செய்கிறான். மகரயாழ் வாசிக்கும் அரங்கபதாகை என்னும் பெண்ணின் மீது காதல் கொள்கிறான். பின் சாளுக்கிய நாட்டு இளவரசி சாருதேவிதான் உண்மையிலேயே தன் மனம் கவர்ந்தவள் என்று நினைக்கிறான். கதை முழுவதும் யாழின் இசையும், ஆதோத்ய வீணையின் இசையும் கேட்பது போல இருக்கிறது. மிக அறிய வகை நடனமான நாதாந்த நடனமும் நமக்கு அறிமுகமாகிறது. சித்திரக் கலையின் அழகில் நம் மனதைப் பறி கொடுக்கிறோம். மிகவும் அருமையாக எழுதப்பட்ட சரித்திர நாவல். தமிழக் கோவில்களில் இருக்கும் சிற்பங்கள் மற்றும் சரித்திரத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்கள் இந்த புத்தகத்தை கண்டிப்பாக வாசித்துப் பார்க்கலாம். மேலும் இந்த கதையைப் பற்றி விரிவாக எனது முகநூல்(Sundar Thilaga) புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete