அழகியசிங்கர்
சுப்ரமண்ய ராஜ÷ கதைகள் என்ற தொகுப்பை எடுத்து வைத்துக்கொண்டேன். 32 கதைகள் கொண்ட இத் தொகுப்பில் இரண்டு குறுநாவல்கள். 'இன்று நிஜம்,' 'இரவுகள் தவறுகள்.'
ஒரு பத்து கதைகளைப் படித்தேன். இந்தப் புத்தகத்தையும் முழுதாக முடிக்காமல் இன்னும் படிப்பதற்குப் பாக்கி வைத்துள்ளேன். இலக்கியச் சிந்தனை கூட்டங்களில் சுப்ரமண்ய ராஜ÷, பாலகுமாரனை பார்த்திருக்கிறேன். சுப்ரமண்ய ராஜ÷ ஒரு மோட்டர் பைக்கில் கம்பீரமாக வந்து இறங்குவார். அப்போது இலக்கியச் சிந்தனைக் கூட்டம் ஆழ்வார்பேட்டையில் ஒரு சர்ச் இருக்கும் இடத்தில் நடக்கும் என்று நினைக்கிறேன்.
இலக்கியச் சிந்தனை கூட்டங்களை சுப்ரமண்ய ராஜ÷வும், பாலகுமாரனும் கலகலப்பாக பேசிக்கொண்டிருப்பார்கள். அசோகமித்திரன் சுப்ரமண்யராஜ÷ கதைகளைக் குறித்து இப்படிக் குறிப்பிடுகிறார். 'முன்மாதிரி என்று யாரையும் குறிப்பிடத் தோன்றவில்லை. அவருடைய எழுத்தில் சமகாலத்துச் சமூக, தனி மனித ஒழுக்கச் சிக்கல்களும், மனசாட்சி நெருக்கடிகளும் சமகாலத் தமிழ் நடையில் வடிவம் தரப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தச் சிக்கல்களையும் இந்த நெருக்கடிகளையும் இவர்தான் எழுதியிருக்க முடியும் என்று தோன்றுகிறது,' என்று எழுதியிருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை எனக்கு சுப்ரமண்ய ராஜ÷ கதைகளைப் படிக்கும்போது இன்னொரு எழுத்தாளரான ஆதவன் ஞாபகம் வருகிறது. எதிர்பாராதவிதமாய் இரு எழுத்தாளர்களுக்கும் ஏற்பட்ட விபத்துக்கள் இந்த எழுத்தாளர்களுடைய கதைகளைப் படிக்கும்போது தோன்றுகிறது. ஆனால் ஆதவன் அதிகமாக எழுதியிருக்கிறார். சுப்ரமண்ய ராஜ÷ இரண்டு குறுநாவல்களுடன் 30 கதைகளுடன் நிறுத்தி விட்டார்.
'நினைவாக' என்ற தலைப்பில் தேவகோட்டை வா மூர்த்தி எழுதியிருக்கும் நினைவுக் குறிப்புகள் உருக்கத்தின் உச்சம் என்று எனக்குத் தோன்றுகிறது.
இப்படி ஆரம்பிக்கிறார் மூர்த்தி. üஇன்று நிஜம்ý சிறுகதைத் தொகுதி வெளியானது. 'முதல் பிரதி மூர்த்திக்கு' என்று எழுதிக் கையெழுத்திட்டு எனக்குத் தந்தான். 'மோனை நயம் கருதியா' என்று கேட்டேன். 'இல்லை. மூர்த்தியின் நயம் கருதி' என்று புன்னகை செய்தான். அந்தப் புன்னகைதான சுப்ரமண்ய ராஜ÷. அந்தப் புன்னகைதான் சுப்ரமண்ய ராஜ÷, என்று குறிப்பிடுகிறார் மூர்த்தி.
இப்படி சுப்ரமண்ய ராஜ÷வை அறிமுகப்படுத்திக் கொண்டு ++ போகிற விஷயம் இந்தப் புத்தகத்தை மேலும் மெருகூட்டுகிறது. நெகிழ வைக்கிறது.
பொதுவாக எழுத்தாளர்களுக்கு உதவக் கூடியவர் சுப்ரமண்ய ராஜ÷. இந்தப் புத்தகத்தில் 07.01.85ல் கல்யாண்ஜி தேவ கோட்டை வா மூர்த்திக்கு ராஜøவைப் பற்றி எழுதிய கடிதத்தை இங்கே குறிப்பிடுகிறார்.
'ராஜ÷வைக் கேட்டதாகச் சொல்லுங்கள். சுப்ரமண்யராஜ÷ சென்னையின் சாயலே இல்லாத நல்ல மனுஷன். மே அல்லது ஜøன் இலக்கியச் சிந்தனையில் பார்க்கும்போது, üஎன்ன ராஜ÷ ஆளே மாறிப் போயிட்டீங்க?ý என்றேன். üவயசு ஆயிட்டுதில்லியா சுவாமி,ý என்றார். மனம் அப்படியேதான் இருக்கிறது. 69-70ல் கோடம்பாக்கம் வெள்ளாளர் தெருவிலிருந்து லிபர்டி வரை - அப்போது சிறுமழை பெய்தது - என்னைக் கூட்டிக்கொண்டு போன, அப்புறம் ஆதம்பாக்கத்திலிருந்து சைக்கிளைத் தள்ளிக்கொண்டே பழவந்தாங்கல் பிரிகிற பாதைவரை பேசிக்கொண்டு அதிக நேரம் எனக்காக ஒரு காலையை ஒதுக்கின அதே முகம் இந்தப் பதினாறு வருஷத்திலும் இருக்கிறது. ராஜ÷, நான் சென்னையில் இருந்திருந்தால், எனக்கு இணக்கமான ஒரு சிநேகிதராக நிச்சயம் இருந்திருப்பார். இப்போது மட்டுமென்ன சிநேகிதர்தான்.' என்று உருகி எழுதியிருக்கிறார் கல்யாண்ஜி.
தான் உபயோகிக்கத் தொடங்கியிருந்த ஒரு விலையுயர்ந்த பேனாவை ராஜ÷வுக்குத் தந்தார் பிரபஞ்சன், இந்தப் பேனாவுக்கு ராஜ÷தான் தகுதி என்பதுபோல.üபிரபஞ்சன் கொடுத்த பேனாý என்று ராஜ÷ ஓரிருமுறைக்கு மேலேயே மூரத்தியிடம் சொல்வாராம். ýஓர் எழுத்தாளன் தன் பேனாவை இன்னொரு எழுத்தாளனுக்கு அளிப்பது சாதாரண விஷயமில்லை மூர்த்தி,ý என்பாராம் ராஜ÷.
இந்தக் கட்டுரையில் ஜே.கே பற்றி ராஜ÷ சொன்னது முக்கியமாக எனக்குப் படுகிறது. ஜே.கிருஷ்ணமூர்த்தி உரையாடல் ஒன்றில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை ராஜ÷ விவரிகிறார். ஆண்டுக்கொரு முறை டிசம்பர் மாலைகளில் ஜே.கேயின் கூட்டத்தொடர் ஒன்று சென்னையில் நடக்கும். அந்த உரையாடல்கள் ஒன்றில் "யாருமே சிந்தித்துச் செயலாற்றுவதில்லை. வாழ்க்கையில் எல்லா நேரங்களுமே பழக்கத்தின் பாதையிலேயே செல்கின்றன.." என்று ஜே.கே கூற, ராஜ÷ எழுந்து, "இந்தக் கூட்டத்திற்கு நான் வந்தது எந்தப் பழக்கத்தின் அடிப்படையிலும் இல்லை. மிகவும் தீர்மானித்து நான் செய்தது நான் இங்கு வந்தது. இதற்கு என்ன ஸôர் உங்கள் பதில்?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஜே.கே, 'நீங்கள் கேள்வி கேட்கும் பழக்கத்தில் இருக்கிறீர்கள் ஸôர்,' என்று ஜே.கே பதிலளித்தாராம். கூட்டம் மொத்தமும் சிரித்ததாம். இதை மூர்த்தியிடம் கூறிய ராஜ÷ 'ஜே.கே என் கேள்விக்குப் பதில் தந்தாரா மூர்த்தி?' என்று கேட்கிறார் மூர்த்தியிடம்.
ராஜ÷வின் கதைகள் பொதுவாகக் கொஞ்சப் பக்கங்களுக்குள் முடிந்து விடுகின்றன. இரண்டு குறுநாவல்கள் தவிர. ஒவ்வொரு கதையையும் படிக்கத் தொடங்கினால் கீழே வைக்கத் தோன்றாது. வாசகன் ஊகிக்க முடியாத முடிவுகளைக் கதைகளில் கொண்டு வருகிறார். üமீண்டும் ஓர் ஆரம்பம்,ý என்ற முதல் கதையை எடுத்துக்கொண்டால், எதிர்பாராத நிகழ்ச்சிதான் இந்தக் கதையில் முக்கியமாகத் தோன்றுகிறது. ரமணி என்பவர் ஒரு ஓட்டலில் பணிபுரிகிறார். ஓட்டல் முதலாளிக்கு விசுவாசமாக இருக்கிறார். எப்போதும் ரமணியின் தயவு அவர் முதலாளிக்கு தேவைப் படுகிறது. அதனால் அவர் வீட்டிலேயே ஒரு அறையை ஒதுக்கித் தங்க வைக்கிறார். 24மணி நேரமும் பணிபுரிந்து கொண்டிருக்கும் வேலை. அந்த வேலையைத் தொடர்ந்தால ரமணியின் லட்சியம் நிறைவேறாமல் போய்விடும்.
சுவாமிநாதனுக்கு ஒரு சோகம் உண்டு. அவர் அவருடைய மனைவியையும், பத்து வயது பையனையும் விட்டுவிட்டு தனியாக கோபித்துக்கொண்டு வந்து விடுகிறார். பின் தன் வாழ்க்கையில் முன்னேறி ஒரு ஓட்டலுக்கு அதிபதியாக இருக்கிறார். உடல் சரியில்லை என்பதால் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார். ரமணியை சிதம்பரத்தில் உள்ள தன் மனைவியையும் பிள்ளையும் பார்த்து அவர்களை அழைத்துக்கொண்டு வர ஏவுகிறார். ஆனால் அவர் மனைவி வர விரும்பவில்லை. அவர் பையனும். இங்கு ரமணிக்கும் அவர் பையனுக்கும் நடக்கும் உரையாடலில்தான் கதையின் மொத்த திருப்பமும் ஏற்படுகிறது. திறமையாக எழுதப்பட்ட கதை
.
இரண்டாவது கதை üஇருட்டில் நின்றý என்ற கதை. கதை ஆரம்பிக்கும்போது ரயில் நின்று விட்டது என்று ஆரம்பிக்கிறது. ஒரு விபத்து. கணேசன் ரயிலை விட்டு இறங்குகிறான். எல்லோரும் கூட்டம் கூட்டமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நிகழ்காலம் எதிரகாலம்தான் இந்தக் கதை. பலவாறு யோசனை செய்து கொண்டே இருக்கிறான். கடைசியில் வண்டி புறப்படும்போது எல்லோரும் ரயிலில் ஏறி விடுகிறார்கள். வண்டியும் புறப்படுகிறது. ஆனால் இவன் வண்டியில் ஏற எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை.
மூன்றாவது கதையான கேள்விகள் என்ற கதையில் கைலாசம் என்பவனிடமிருந்து ஒரு மொட்டைக் கடிதாசு வருகிறது. தன் மனைவியைப் பற்றி. அவள் கற்பை சந்தேகப்படும்படியாக. வெளியில் தன் பதட்டத்தைக் காட்டாமல் இதை ஆராய மதுரைப்போய் கைலாசத்தைப் பார்க்க நினைக்கிறான் ஒரு லாட்ஜில் தங்குகிறான். மொட்டைக் கடுதாசி எழுதியவன் அந்த ஓட்டலுக்கு அடிக்கடி வருவான் என்ற கேள்விப்படுகிறான். அந்த ஓட்டலில் விபச்சாரம் நடக்கிறது. ஒரு பெண்ணுடன் இரவை கழிக்கிறான். அவன் மனது மாறி விடுகிறது. கைலாசம் என்பவனைச் சந்திக்காமல் அந்த இடத்தைக் காலி செய்துகொண்டு போய்விடுகிறான். ஒன்றும் வெளிப்படையாக சொல்லாமல் மனதிலிருந்து உருவாகி மனதிலேயே முடிந்து விடுகிற கதை. அதிர்ச்சியான விஷயத்தை எப்படி எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்ற இக் கதை புகட்டுகிறது.
இன்னொரு கனவு என்ற கதையில் முன்னதாக நடக்கப் போகிறதைக் கனவுமூலம் ஒருவன் டாக்டரிடம் வெளிப்படுத்துகிறான். கடைசியில் டாக்டரை சந்திப்பதையே கனவாக வருகிறது என்று கொல்கிறான். டாக்டருடன் பேசிக்கொண்டிருக்கும்போது டாக்டரை கத்தியால் குத்துவதுபோல் கனவில் வருகிறது.
முகமெல்லாம் வியர்க்க, மூர்த்தி திடீரென்று விழித்துக்கொண்டான். அதுவே ஒரு கனவுதான். நேரே அவன் டாக்டரைப் பார்க்கவில்லை.
வண்டியில் பெற்றோல் தீர்ந்துபோய் தள்ளிக்கொண்டு போகும்போது வரப்பில் ஒரு பெண்ணைப் பார்த்துச் சபலப்படும் கதை. உண்மையில் கற்பனையில் சபலப்பட்டு முடிந்து விடுகிற கதை.
கைலாசம்னு ஒருத்தர என்ற கதையில் வாரம் ஒருமுறை கடன் வாங்குவதற்கென்று சுவாமிநாதனைப் பார்க்க வீட்டிற்கு வருவான். அவன் கேட்கிற பணத்தை சுவாமிநாதன் கொடுப்பான். அவன் மனைவிக்கு இது பிடிக்கவில்லை. ஒருமுறை அவன் இல்லாதபோது அவன் வருகிறான். பின் அவனைத் திட்டி அனுப்பி விடுகிறாள். சுவாமிநாதன் இதைத் தெரிந்துகொண்டு மனைவியைத் திட்டுகிறான். பணம் இல்லாதபோது படிக்கும்போது கைலாசம் எப்படி உதவி செய்தான் என்பதைக் குறிப்பிடுகிறான். கைலாசத்தை நேரில் பார்க்கப் போகிற சுவாமிநாதனுக்கு அவன் குடித்துவிட்டு கெட்டழிகிற போக்ûப் பார்த்து அவனைப் பார்க்காமலேயே வந்துவிடுகிôன். பத்து நான் வராதவன் அவன் வீட்டில் இல்லாதபோது கைலாசம் வருகிறான். அவன் மீது இரக்கப்பட்டு சுவாமிநாதன் மனைவி அவனுக்குப் பணம் கொடுத்தனுப்புகிறாள்.
இப்படியே போகிறது சுப்ரமண்ய ராஜ÷வின் கதைகள். அடிக்கடி கதா மாந்தர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள். தண்ணீ அடிக்கிறார்கள். பரர்க்கிற பெண்களுடன் விபரீத சகவாசம் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். சுலபமான நடையில் விதம் விதமாய் கதை எழுதிக்கொண்டு போகிறார். மேலும் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டுகிறது.
பத்து கதைகளை படிக்கும்போது கதைகளில் தன்னை மையப்படுத்தி கதைகள் எழுதிக்கொண்டு போகிறார். ஆனால் விதம்விதமாக கதைகளைக் கூறுகிறார். படிப்பதற்கு அலுப்பே ஏற்படுத்தவில்லை. 39 வயதுக்குள் சாதனை செய்திருக்கிறார் சுப்ரமணிய ராஜø.
சுப்ரமண்ய ராஜøவின் முழுத் தொகுப்பை கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதேபோல் ஆதவன் கதைகளையும். ஒருவர் இந்த இரண்டு தொகுப்புகளையும் வாங்கிப்படிப்பது அவசியம்.
No comments:
Post a Comment