I am doing this. Average I am Reading a novel once a week. Last week I finished " கலங்கிய நதி" By P A Krishnan. Day before yesterday I started " புலிநகக்கொன்றை" எனக்கு உன்னைப்போல் எழுதவோ(அ) விமர்சிக்கவோ போதாது. நேர்ல விவாதிப்பேன். Any How I will reoprt daily what I am Reading
இந்தப் பகுதியை இன்று ஆரம்பித்து 50 நாட்களுக்கு 50 மணி நேரங்கள் வாசிப்பது என்று முடிவு எடுத்துள்ளேன். என்னைப்போல இன்னும் சில நண்பர்களும் இதைத் தொடர்வார்கள் என்று தோன்றுகிறது. முதல் நாள் அனுபவத்தைக் குறிப்பிட வேண்டுமென்று தோன்றுகிறது. சிறுவாணி வாசகர் மையம் மூலம் அறிமுகமான புத்தகம்தான் ரா கி ர டைம்ஸ் என்ற கட்டுரைத் தொகுப்பு. எழுதியவர் ரா தி ரங்கராஜன் என்ற எழுத்தாளர். அண்ணா நகர் டைம்ஸ் இல் வெளிவந்து நாலு மூலை கட்டுரைகளின் தொகுப்பு இது. பத்திரிகையின் பக்கங்களுக்கு ஏற்ப 63 கட்டுரைகளை எழுதி உள்ளார். நான் ஏற்கனவே 159 பக்கங்கள் வரை இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டேன். இன்று 160 பக்கத்திலிருந்து 214 பக்கங்கள் வரை படித்து முடித்தேன். வழக்கமாக கட்டாயப்படுத்திக்கொண்டு ஒரு புத்தகத்தை நான் படிப்பதில்லை. ஏன் பெரும்பாலும்படிப்பதில்லை. வாசிக்க வாசிக்க என்ற அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று வாசிக்க ஆரம்பித்தேன். அப்பúôதுதான் தெரிந்தது வாசிப்பது அவ்வளவு எளிதல்ல என்று. இன்று 44 பக்கங்கள் படித்து புத்தகம் முழுவதும் படித்து முடித்துவிட்டேன். 44 பக்கங்கள் படிப்பதற்கு 80 நிமிடங்கள் ஆகிவிட்டன. இன்று பகல் 12.55க்குப் படிக்க உட்கார்ந்தேன். 12.55க்குள் கண்ணை சுழட்டத் தொடங்கின. பிள்ளையார் சதூர்த்தி என்பதால் விருந்து சாப்பிட்டதால் கிறங்க வைக்கும் தூக்கம். பேசாமல் போய்ப் படுத்துக்கொண்டேன். தூங்கி எழுத்தவுடன் மணி 3 ஆகிவிட்டது. புத்தகத்தை எப்படியாவது முடித்துவிட வேண்டுமென்று முடித்துவிட்டேன். 44 பக்கங்கள் படிக்க 80 நிமிடங்கள் ஓடிவிட்டன. நான் சற்று வேகமாகப் படிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். சில நாட்களில் என் வேகம் கூடும் என்று நம்புகிறேன்.. என் சில நண்பர்கள் 80 நிமிடத்தில் 100 பக்கங்களுக்கு மேல் படித்து விடுவார்கள். இந்தப் புத்தகத்தைப் பற்றி இன்னும் சில தகவல்களைப் பின்னால் தருகிறேன்.
சமீபத்தில் தமிழ் நாட்டில் Ganesh Bala சார் அவர்களைச் சந்தித்தபோது ‘ ட்ரங்க் பொட்டி’ என்கிற அவரது புத்தகத்தை எனக்கு அன்புப் பரிசாகக் கொடுத்தார். மொத்தம் 95 பக்கங்கள்.
பக்கங்களின் எண்ணிக்கையைக் கொண்டு படிக்காமல் கதைப் புத்தகத்தை முதலில் இருந்து கடைசி வரை ஒரு கழுகுப் பார்வை பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு.. சுவாரசியமாகத் தோன்றும் பக்கங்களை வாசிக்க ஆரம்பித்து விடுவேன். ஆதலால் நான் வாசித்த பக்கங்களின் எண்ணிக்கையை எழுத இயலவில்லை.
புத்தகத்தைத் திறந்த போது டிரங்க் பொட்டியில் இருந்த சுவாரசியமான பொருட்கள் என் கவனத்தை ஈர்த்தது. எனவே அவற்றில் மட்டும் கவனம் செலுத்தி வாசிக்க ஆரம்பித்தேன்.
பாலா சாரின் தாத்தா மிகவும் சுவாரசியமானப் பொருட்களை டிரங்க் பொட்டிக்குள் பதுக்கி வைத்திருக்கிறார். சிறிய சைசில் இரண்டு மரப்பாச்சி பொம்மை, கிலு கிலுப்பை, அழகிய மூக்குப் பொடி டப்பா, ஈயச் சொம்பு, சிறிய பெட்டியில் இருந்த காங்கிளின் பேனா, மந்திரிச்சு வைத்திருந்த வெள்ளை பஞ்சு பொம்மை, பழைய ஓலைச் சுவடிகள் அடங்கிய கட்டு, சதுர க்யூப் மேஜிக், பழைய ரிக்கார்ட் ப்ளேயர், வெத்தலைச் செல்லமும், பாக்கு உரலும், அழகிய கிளி முகத்துடன் கட்டிங் ப்ளேயர், ராஜாரவி வர்மா ஓவியத்தின் நகல், இந்த கதையை வாசிக்கும் பெண்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நெக்லஸ், படி அளவைகள், லாந்தர் விளக்கு, இடுப்பில் செருகும் மாடல் வாட்ச் மற்றும் அலங்காரப் பெட்டிக்குள் இருந்த பழைய காசுகள் ..... அப்பப்பா!!
ஒரு புதையல் சுரங்கத்திற்குள் நுழைந்தார் போல் இருந்தது.
முன்னொரு சமயம், தாத்தா இருக்கும் போது பொட்டியை ஆராய முனைந்திருக்கிறார். அதிலிருந்த புத்தகம் ஒன்றை தெரியாமல் கிழித்து விட, தாத்தாவிடம் செமத்தியாக அடி வாங்கியிருக்கிறார். அதிலிருந்து தாத்தாவின் டிரங்க் பொட்டியை ஆராய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அவர் இறந்த பிறகு ஒவ்வொரு பொருளாக எடுத்துப் பார்க்கிறார். அவை பொருள்கள் மட்டும் அல்ல. அதிலிருக்கும் நினைவுகளை, அவற்றின் கதைகளை பாலா சாரின் பாட்டி அவருக்கு எடுத்துச் சொல்கிறார்.
காங்கிளின் பேனாவின் கதை என் உள்ளத்தை உருக்கியது. நிறைவேறாத காதல் கதையின் நினைவுச் சின்னமாக இருக்கிறது அந்தப் பேனா!
கிலு கிலுப்பைக்குள்ளும் நெஞ்சைக் கிளறி விடும் புத்திர சோகம்.
கிளி முகத்துடன் கூடிய அழகிய கட்டிங் ப்ளேயரைப் பார்த்த போது ( அடுத்த தடவை) பாலா சாரின் வீட்டுக்குப் போகும் போது நைசாக ‘ அபேஸ்’ செய்து விடலாமா என்று தோன்றியது. அந்த கட்டிங் ப்ளேயர் தாத்தாவின் இலங்கை பேனா நண்பர் பரிசாகக் கொடுத்ததாம்!
நல்ல வேளை! குடும்பத்து பெண்களுக்குள் குடுமிப் பிடி சண்டை வந்து விடாமல் இருக்க அந்த நெக்லசைத் தாத்தா ட்ரங்க் பெட்டிக்குள் போட்டு மூடி விட்டார். இல்லையென்றால் பூகம்பம் வெடித்திருக்கும்.
வெள்ளைப் பஞ்சு பொம்மைக்குள் இருக்கும் திகில் கதை ஒரு திரில்லர் கதை போன்று திகிலூட்டியது.
குடும்பத்தை இரண்டாக்கிய ராஜா ரவி வர்மாவின் ஓவிய நகல் நம் மனதில் மாறாத வடுவை உண்டு பண்ணி விடுகிறது.
என் வீட்டில் டிரங்க் பொட்டி எதுவும் இல்லை. ஆதலால்பொக்கிஷங்களும்இல்லை. சிறுமியாய் இருந்த போது எடுத்த கருப்பு, வெள்ளைப் புகைப் படங்கள், கல்லூரிப் புகைப் படங்கள், தோழர், தோழிகளின் ஆட்டோகிராப் புத்தகங்கள், (நைந்துபோன)திரு மணியம் அவர்களின் ஓவியத்துடன் கூடிய ‘ பொன்னியின் செல்வன் புத்தகம்’, டைரிகள் ..... இவை போன்றவைகள் தான் இன்னும் தான் மிச்சமிருக்கின்றன.
வாசிப்போம் வாசிப்போம்
ReplyDeleteவாசிப்பு மாரத்தான் எப்போது துவங்குகிறது
ReplyDeleteI am doing this. Average I am Reading a novel once a week. Last week I finished " கலங்கிய நதி" By P A Krishnan.
ReplyDeleteDay before yesterday I started " புலிநகக்கொன்றை"
எனக்கு உன்னைப்போல் எழுதவோ(அ) விமர்சிக்கவோ போதாது. நேர்ல விவாதிப்பேன்.
Any How I will reoprt daily what I am Reading
வாவ்!நல்ல முயற்சி.தூங்கிதூங்கி பழகிக் கொண்டோர்க்கு இது நல்ல எழுப்புமணி. நன்றி..
ReplyDeleteA preferably better attempt to induce reading All the best wishes
ReplyDeleteவரவேற்கத்தக்க முயற்சி நான் துணையிருப்பேன்
ReplyDeleteஎப்பொழுது தொடக்கம்?
ReplyDelete02-09-19 திங்கள் கிழமை ஒருமணி நேர வாசிப்பு "சிலையும் கலையும் (கோவிலூர் ஆதின அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் )
ReplyDeleteமுதல் நாளில் வாசிப்பனுபவம்
ReplyDeleteஅழகியசிங்கர்
இந்தப் பகுதியை இன்று ஆரம்பித்து 50 நாட்களுக்கு 50 மணி நேரங்கள் வாசிப்பது என்று முடிவு எடுத்துள்ளேன். என்னைப்போல இன்னும் சில நண்பர்களும் இதைத் தொடர்வார்கள் என்று தோன்றுகிறது.
முதல் நாள் அனுபவத்தைக் குறிப்பிட வேண்டுமென்று தோன்றுகிறது.
சிறுவாணி வாசகர் மையம் மூலம் அறிமுகமான புத்தகம்தான் ரா கி ர டைம்ஸ் என்ற கட்டுரைத் தொகுப்பு. எழுதியவர் ரா தி ரங்கராஜன் என்ற எழுத்தாளர்.
அண்ணா நகர் டைம்ஸ் இல் வெளிவந்து நாலு மூலை கட்டுரைகளின் தொகுப்பு இது.
பத்திரிகையின் பக்கங்களுக்கு ஏற்ப 63 கட்டுரைகளை எழுதி உள்ளார். நான் ஏற்கனவே 159 பக்கங்கள் வரை இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டேன். இன்று 160 பக்கத்திலிருந்து 214 பக்கங்கள் வரை படித்து முடித்தேன். வழக்கமாக கட்டாயப்படுத்திக்கொண்டு ஒரு புத்தகத்தை நான் படிப்பதில்லை. ஏன் பெரும்பாலும்படிப்பதில்லை. வாசிக்க வாசிக்க என்ற அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று வாசிக்க ஆரம்பித்தேன். அப்பúôதுதான் தெரிந்தது வாசிப்பது அவ்வளவு எளிதல்ல என்று. இன்று 44 பக்கங்கள் படித்து புத்தகம் முழுவதும் படித்து முடித்துவிட்டேன். 44 பக்கங்கள் படிப்பதற்கு 80 நிமிடங்கள் ஆகிவிட்டன.
இன்று பகல் 12.55க்குப் படிக்க உட்கார்ந்தேன். 12.55க்குள் கண்ணை சுழட்டத் தொடங்கின. பிள்ளையார் சதூர்த்தி என்பதால் விருந்து சாப்பிட்டதால் கிறங்க வைக்கும் தூக்கம். பேசாமல் போய்ப் படுத்துக்கொண்டேன்.
தூங்கி எழுத்தவுடன் மணி 3 ஆகிவிட்டது. புத்தகத்தை எப்படியாவது முடித்துவிட வேண்டுமென்று முடித்துவிட்டேன். 44 பக்கங்கள் படிக்க 80 நிமிடங்கள் ஓடிவிட்டன. நான் சற்று வேகமாகப் படிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். சில நாட்களில் என் வேகம் கூடும் என்று நம்புகிறேன்.. என் சில நண்பர்கள் 80 நிமிடத்தில் 100 பக்கங்களுக்கு மேல் படித்து விடுவார்கள். இந்தப் புத்தகத்தைப் பற்றி இன்னும் சில தகவல்களைப் பின்னால் தருகிறேன்.
சமீபத்தில் தமிழ் நாட்டில் Ganesh Bala சார் அவர்களைச் சந்தித்தபோது ‘ ட்ரங்க் பொட்டி’ என்கிற அவரது புத்தகத்தை எனக்கு அன்புப் பரிசாகக் கொடுத்தார். மொத்தம் 95 பக்கங்கள்.
ReplyDeleteபக்கங்களின் எண்ணிக்கையைக் கொண்டு படிக்காமல் கதைப் புத்தகத்தை முதலில் இருந்து கடைசி வரை ஒரு கழுகுப் பார்வை பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு.. சுவாரசியமாகத் தோன்றும் பக்கங்களை வாசிக்க ஆரம்பித்து விடுவேன். ஆதலால் நான் வாசித்த பக்கங்களின் எண்ணிக்கையை எழுத இயலவில்லை.
புத்தகத்தைத் திறந்த போது டிரங்க் பொட்டியில் இருந்த சுவாரசியமான பொருட்கள் என் கவனத்தை ஈர்த்தது. எனவே அவற்றில் மட்டும் கவனம் செலுத்தி வாசிக்க ஆரம்பித்தேன்.
பாலா சாரின் தாத்தா மிகவும் சுவாரசியமானப் பொருட்களை டிரங்க் பொட்டிக்குள் பதுக்கி வைத்திருக்கிறார். சிறிய சைசில் இரண்டு மரப்பாச்சி பொம்மை, கிலு கிலுப்பை, அழகிய மூக்குப் பொடி டப்பா, ஈயச் சொம்பு, சிறிய பெட்டியில் இருந்த காங்கிளின் பேனா, மந்திரிச்சு வைத்திருந்த வெள்ளை பஞ்சு பொம்மை, பழைய ஓலைச் சுவடிகள் அடங்கிய கட்டு, சதுர க்யூப் மேஜிக், பழைய ரிக்கார்ட் ப்ளேயர், வெத்தலைச் செல்லமும், பாக்கு உரலும், அழகிய கிளி முகத்துடன் கட்டிங் ப்ளேயர், ராஜாரவி வர்மா ஓவியத்தின் நகல், இந்த கதையை வாசிக்கும் பெண்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நெக்லஸ், படி அளவைகள், லாந்தர் விளக்கு, இடுப்பில் செருகும் மாடல் வாட்ச் மற்றும் அலங்காரப் பெட்டிக்குள் இருந்த பழைய காசுகள் ..... அப்பப்பா!!
ஒரு புதையல் சுரங்கத்திற்குள் நுழைந்தார் போல் இருந்தது.
முன்னொரு சமயம், தாத்தா இருக்கும் போது பொட்டியை ஆராய முனைந்திருக்கிறார். அதிலிருந்த புத்தகம் ஒன்றை தெரியாமல் கிழித்து விட, தாத்தாவிடம் செமத்தியாக அடி வாங்கியிருக்கிறார். அதிலிருந்து தாத்தாவின் டிரங்க் பொட்டியை ஆராய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அவர் இறந்த பிறகு ஒவ்வொரு பொருளாக எடுத்துப் பார்க்கிறார். அவை பொருள்கள் மட்டும் அல்ல. அதிலிருக்கும் நினைவுகளை, அவற்றின் கதைகளை பாலா சாரின் பாட்டி அவருக்கு எடுத்துச் சொல்கிறார்.
காங்கிளின் பேனாவின் கதை என் உள்ளத்தை உருக்கியது. நிறைவேறாத காதல் கதையின் நினைவுச் சின்னமாக இருக்கிறது அந்தப் பேனா!
கிலு கிலுப்பைக்குள்ளும் நெஞ்சைக் கிளறி விடும் புத்திர சோகம்.
கிளி முகத்துடன் கூடிய அழகிய கட்டிங் ப்ளேயரைப் பார்த்த போது ( அடுத்த தடவை) பாலா சாரின் வீட்டுக்குப் போகும் போது நைசாக ‘ அபேஸ்’ செய்து விடலாமா என்று தோன்றியது. அந்த கட்டிங் ப்ளேயர் தாத்தாவின் இலங்கை பேனா நண்பர் பரிசாகக் கொடுத்ததாம்!
நல்ல வேளை! குடும்பத்து பெண்களுக்குள் குடுமிப் பிடி சண்டை வந்து விடாமல் இருக்க அந்த நெக்லசைத் தாத்தா ட்ரங்க் பெட்டிக்குள் போட்டு மூடி விட்டார். இல்லையென்றால் பூகம்பம் வெடித்திருக்கும்.
வெள்ளைப் பஞ்சு பொம்மைக்குள் இருக்கும் திகில் கதை ஒரு திரில்லர் கதை போன்று திகிலூட்டியது.
குடும்பத்தை இரண்டாக்கிய ராஜா ரவி வர்மாவின் ஓவிய நகல் நம் மனதில் மாறாத வடுவை உண்டு பண்ணி விடுகிறது.
என் வீட்டில் டிரங்க் பொட்டி எதுவும் இல்லை. ஆதலால்பொக்கிஷங்களும்இல்லை. சிறுமியாய் இருந்த போது எடுத்த கருப்பு, வெள்ளைப் புகைப் படங்கள், கல்லூரிப் புகைப் படங்கள், தோழர், தோழிகளின் ஆட்டோகிராப் புத்தகங்கள், (நைந்துபோன)திரு மணியம் அவர்களின் ஓவியத்துடன் கூடிய ‘ பொன்னியின் செல்வன் புத்தகம்’, டைரிகள் ..... இவை போன்றவைகள் தான் இன்னும்
தான் மிச்சமிருக்கின்றன.